Sunday, May 31, 2020

490. கடவுள் கொண்ட திரு உருவம்(இறைவன் தந்த இருமலர்கள்) **


கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயி-என்ற அன்புருவம்

ப்ரேமை-என்ற ரூபத்திலே இறைவன்-வந்தான் காணுங்களேன்

(2)

கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயிபிரான் சாயிபிரான்

(MUSIC)

 த்ரேதா-யுகத்தில் ராமபிரான் த்வாபரத்தில் அவன் கண்ணபிரான் (2)

அவனே அந்த-ஏசுபிரான் அவனே அந்த-புத்தபிரான் (2)

அல்லா-சிவ-ஜொ..ராஷ்டிரரும் ஜைனமுனி மஹா-வீரரவன்

எல்லாம் அந்த சாயி-பிரான் அவனே சகல தெய்வமம்மா

கடவுள்-கொண்ட திரு-உருவம் சாயி-என்ற அன்புருவம்

ப்ரேமை-என்ற ரூபத்திலே இறைவன்-வந்தான் காணுங்களேன்

கடவுள் அந்த சாயிபிரான்

(MUSIC)

அலையும்-உலகை அவன்-கண்டு -

தானே-இரக்கம் தனைக்-கொண்டு

(2)

சாயிராம் எனும்-பேர் சூடிக்கொண்டான்-

தானே-உலகில் இறங்கிவந்தான்

(2)

உலகில்-அவனே திரும்பிடுவான் ப்ரேமையின் வடிவம் பூண்டிடுவான்

இதயம்-அன்று இன்பம்பெறும் அதுவரை எனதிசைப் பாட்டு-வரும்

கடவுள்-கொண்ட திரு-உருவம்..



No comments:

Post a Comment