Showing posts with label மலர்களிலே பல நிறம் கண்டேன். Show all posts
Showing posts with label மலர்களிலே பல நிறம் கண்டேன். Show all posts

Tuesday, August 20, 2024

655.மலரினைப் போலே(மலர்களிலே பல நிறம் கண்டேன்)**

மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம் 
உதட்டினிலே அவர் பேர் கொள்வோம் அவர் சொல்லிய சேவை கரம் கொள்வோம் 
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம்
(MUSIC)

சமிதி எனும் ஒரு திருக்கோவில் அதில் தினம் சாயி லீலைகளே (2)
சென்று மனம் அதன் இனிமையிலே இதம் பெற்றிட ஏங்கும் சடுதியிலே (2) 
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம்
(MUSIC)

சமிதியில் கேட்டிடும் திருப்பாட்டு சேவை நடந்திடும் அன்போடு (2)
ஆங்கருள் தந்திடுவார் பாரு சத்ய சாயிரானும் அதைப்பார்த்து (2)
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம் 
உதட்டினிலே அவர் பேர் கொள்வோம் அவர் சொல்லிய சேவை கரம் கொள்வோம் 
மலரினைப் போலே மனம் கொள்வோம் அதில் சாயிபிரானை வரச் செய்வோம்

Sunday, March 12, 2023

614.மந்திரமாவது திருநீறு(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

மந்திரமாவது திருநீறு சத்ய சாயீசன் -தரும் திருநீறு
மந்திரம் போலந்தத் திருநீறு மனமந்தியை அடக்கிடும் விதம் பாரு
மந்திரமாவது திருநீறு சத்ய சாயீசன் -தரும் திருநீறு
(music)

சிந்தையில் சாயி எனும்-பேரு  கொண்டவர்க்கருளிடும் திருநீறு (2)
 தந்தையும் அன்னையும் குருபோல நீ வேண்டிடும் விதம்-வரும் திருநீறு (2)
மந்திரமாவது திருநீறு சத்ய சாயீசன் -தரும் திருநீறு
(music)

சிந்தையில் அன்பிறை நினைப்போடு இருப்பவர்க்கதுவே உண்சோறு (2)
பசித்தவர்க்குணவினை அன்போடு இடும் அடியவர்க்கருளிடும் திரு நீறு (2)
மந்திரமாவது திருநீறு சத்ய சாயீசன் -தரும் திருநீறு
மந்திரம் போலந்தத் திருநீறு மனமந்தியை அடக்கிடும் விதம் பாரு
மந்திரமாவது திருநீறு சத்ய சாயீசன் -தரும் திருநீறு

 Other SONGS Recorded

Thursday, February 2, 2023

607.பர்த்தி புரி திருக் கைலாயம்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
நாரணன் ஈசனின் வடிவாகும் அந்த சாயி பிரான் அருள் தலமாகும்
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
(music)

சாயி-குல்வந்த் திருச் சபைதனிலே தாயினும் அருளிடும் வடிவினிலே (2)
கோவில் கொண்டே தெய்வம் அருகினிலே-நமை அழைத்திடுதே பார் பாரினிலே 
கோவில் கொண்டே தெய்வம் அருகினிலே-நமை அழைத்திடுதே பார் பாரினிலே அந்த
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
(music)

அன்பே சிவமெனச் சொல்வாரே அதுவே நிஜமெனச் சொல்வாரே (2)
இரண்டும் சேர்ந்து-சத்திய சாயி எனப் பேர் கொண்டு வந்தது முன்னாலே
இரண்டும் சேர்ந்து-சத்திய சாயி எனப் பேர் கொண்டு உள்ளது முன்னாலே அந்த
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
நாரணன் ஈசனின் வடிவாகும் அந்த சாயி பிரான் அருள் தலமாகும்
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம்

சாயி கீதம்-7

முதல்பக்கம்

Wednesday, January 11, 2023

606.நாரண சேவை பசி தீர்க்கும்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) ***

நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும் 
மானிட சேவை உயர்வாகும் எனும் சாயியின் வாக்கே உயர்வேதம்
நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும் 
(MUSIC)

பசிவர யாவும் பறந்தோடும் என்பது நல் முது மொழியாகும் (2)
ப்ரேமையில் உணவைப் பரிமாறும் அந்த நாரண சேவையை மறை போற்றும் (2)
நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும் 
மானிட சேவை உயர்வாகும் எனும் சாயியின் வாக்கே உயர்வேதம்
(MUSIC)

அன்பே சாயியின் மொழியாகும் பண்பே அவர்தரும் வழியாகும் (2)
உணவைத் தர பசிப் பிணிபோகும் அந்த சேவை.. தொண்டருக்கணியாகும்  (2)
நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும் 
மானிட சேவை உயர்வாகும் எனும் சாயியின் வாக்கே உயர்வேதம்
நாரண சேவை பசி தீர்க்கும் அந்த நாரணன் பூஜை அதுவாகும்

Friday, March 26, 2021

559. சமிதிக்கு மீண்டும்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **

சமிதிக்கு-மீண்டும் சென்றிடுவோம்-நம் 
ஸ்வாமியின் பாதம் பணிந்திடுவோம் 
அமைதியில்-அன்பைப் பூண்டிடுவோம்-நாம் 
சாயீசன்-புகழ் பாடிடுவோம்
சமிதிக்கு-மீண்டும் சென்றிடுவோம்-நம் 
ஸ்வாமியின் பாதம் பணிந்திடுவோம்
(MUSIC)
பாரினில் எங்கும் நோயாச்சு 
வீட்டினுள் சிறை எனும் நிலையாச்சு 
(2)
ஸ்வாமியின் அருளால் அது போச்சு 
இனி விடுவோம் நிம்மதிப் பெருமூச்சு
(2)
சமிதிக்கு-மீண்டும் சென்றிடுவோம்-நம் 
ஸ்வாமியின் பாதம் பணிந்திடுவோம்
(MUSIC)
 அஞ்சேல் என அவன் கை காக்கும் 
அன்பே எனும் அவன் சொல் கேட்கும்
(2)
தந்தேன் அருள் எனும் எழில் தோற்றம்
அதை சமிதியில் நாம்-தரி..சிக்க வேணும் 
என்னே அவன் அருள் எழில் தோற்றம் 
அதைக் கண்டு நாம் அவனிடம் சிக்க வேண்டும்
சமிதிக்கு-மீண்டும் சென்றிடுவோம்-நம் 
ஸ்வாமியின் பாதம் பணிந்திடுவோம் 
அமைதியில்-அன்பைப் பூண்டிடுவோம்-நாம் 
சாயீசன்-புகழ் பாடிடுவோம்
சமிதிக்கு-மீண்டும் சென்றிடுவோம்-நம் 
ஸ்வாமியின் பாதம் பணிந்திடுவோம்

முதல்பக்கம் 

557. உதட்டினில்-சாயி (மலர்களிலே பல நிறம் கண்டேன்) ***

உதட்டினில்-சாயி பேர் சொல்வோம்-நம் கரத்தினில்-சேவை தனைக் கொள்வோம்  
மனத்தினில் அன்பே எனக் கொள்வோம்-அது சாயியின் பண்பே எனச் சொல்வோம்
உதட்டினில்-சாயி பேர் சொல்வோம்-நம் கரத்தினில்-சேவை தனைக் கொள்வோம்
(MUSIC)
சாயி பிரான்-தரும் திருச்செய்தி 
இங்கவன்-வாழ்வே எனும்-நியதி
(2)
தொண்டரின் வாழ்வே அச்செய்தி-என 
மாற்றியதே-அவன் அருள்சக்தி
(2)
உதட்டினில்-சாயி பேர் சொல்வோம்-நம் கரத்தினில்-சேவை தனைக் கொள்வோம்
(MUSIC)
நெஞ்சே ஆலயம் எனக்கொள்ளு 
அதிலே மாசினை உடன் தள்ளு
நெஞ்சே ஆலயம் எனக்கொள்ளு 
நெஞ்சில் மாசினை உடன் தள்ளு
பஞ்சினும் மென்மையாய் நீ சொல்லு-அந்த 
சஞ்சிதம் எனும்-வினை தனை வெல்லு