Showing posts with label நிலவே என்னிடம் நெருங்காதே. Show all posts
Showing posts with label நிலவே என்னிடம் நெருங்காதே. Show all posts

Sunday, May 17, 2020

275. கண்ணேசாயி தாலேலோ (நிலவே என்னிடம்)**

Female version

  விருத்தம் 
இன்னமுதம் உண்டு 
கொஞ்சம் இதம் கொண்டு 
கண்வளர் தாலேலோ 
(2)
சாயி
இன்னமுதம் உண்டு 
கொஞ்சம் இதம் கொண்டு 
கண்வளர் தாலேலோ 

கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ(2)
முத்தே பர்த்தியின் ரத்தினமேநீ உறக்கம் கொள்வாய் தாலேலோ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
(Music)
ஆடிய களைப்பால் இளைத்தாயே 
பொன்மேனிமைக் கரிபோல் கறுத்தாயே
(2)
ஓடிய உன்கால் களைத்தாயே நல்ஓய்வினை இனிமேல் எடுசாயீ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
(Music)
பிள்ளையின் வடிவில் அன்னையடா (2)
நீ  அன்னையின் துயரை புரிந்துகொள்வாய்
பாட்டினில்  சொல்வேன் தாலேலோ 
நீ கண்வளராயோ சாயீசா 
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
 (Music)
ஓய்வு இல்லாதெந்..நேரமுமே (2)
அந்த ஆண்டவன் உனக்கேன் வேலை அய்யா 
ஓய்வு இல்லாதெந்..நேரமுமே
அந்த ஆண்டவன் உனக்கேன் வேலை அய்யா 

நிம்மதியாய்நீ தூங்கிடுவாய் 
எந்த நேரமும்நீஏன் விழித்திருக்காய்  
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ
முத்தே பர்த்தியின் ரத்தினமேநீ உறக்கம் கொள்வாய் தாலேலோ
கண்ணே சாயி தாலேலோ செம் பொன்னே மணியே தாலேலோ

Sunday, May 28, 2017

527. நிஜமே உன் நிகர்(நிலவே என்னிடம் நெருங்காதே)**

நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை (2)
உணவாய் அன்பினைத் தருவோனே-நீ என்-தாய் என்றால் மிகையில்லை
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
மேடையில் அழகாய்ப் பலர்-வரலாம் 
அவர்-கோலத்தை எழிலாய்ப் புனைந்திடலாம்
(2)
ஆயினும்-நா..ய..கன் இல்லையென்றால் 
அந்நாடகம் சுவைத்தே இருந்திடுமோ
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
கோது-இல்லாத ஓர்-தலைவா 
நல்ல உள்ளத்தில் உறையும் வாலிறைவா 
(2)
ஆடிய-பாதம் பணியுமுன்னே நீ-ஓடிவிட்டாய்-ஏன் சொல்லிடையா
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை
(MUSIC)
அமைதி பொல்லாத போதையன்றோ 
அந்த போதையை நீ-தான் ஊட்டிவிட்டாய் 
(2)
அந்நிலை-அந்தோ நானிழந்தேன் 
எந்தன் நினைவில் நின்றேன்-நீ ஓடிவிட்டாய்
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை 
உணவாய் அன்பினைத் தருவோனே-நீ  என்-தாய் என்றால் மிகையில்லை
நிஜமே உன்-நிகர் நீ-தானே பார் முழுதும் உனைப்போல் வேறில்லை

Sunday, March 27, 2016

65. உலகேஉன்அருள் (நிலவே என்னிடம் நெருங்காதே )***

(நிலவே என்னிடம் நெருங்காதே )

உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை (2)
சுடரேஉலகின் உயிர்நீயே-நீ கலங்கும்உலகில் ஏன்இல்லை
உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
கோடையில் குளிராய் இருந்தாயே வரும்
நோய்களை-மருந்தாய்த் தீர்த்தாயே
(2)
எனக்கெனவேநீ இருந்தாயே இங்கு அவதரித்தேநீ வா தாயே
உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
பேதை என்கவலை யார் தீர்ப்பார்
என் உள்ளத்தின் துயரை யார்-துடைப்பார்
(2)
பாட்டினில் நானும் பணியுமுன்னே
நீ பறந்துவிட்டாயே என்தாயே 
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
அமைதிதந்தாய்நீ அன்புதந்தாய் 
வந்ததுயர்களையேநீ துடைத்து வந்தாய்
(2)
நல்மதி கொடுத்தே நீசிறந்தாய்
எந்த நிலையிலும்நீயே புகல்கொடுத்தாய் 
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
சுடரேஉலகின் உயிர்நீயே-நீ கலங்கும்உலகில் ஏன்இல்லை
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை