Showing posts with label ஒரே பாடல் உன்னை அழைக்கும். Show all posts
Showing posts with label ஒரே பாடல் உன்னை அழைக்கும். Show all posts

Wednesday, May 3, 2017

132. ஹரே சாயி என்றே (ஒரே பாடல் உன்னை அழைக்கும்) ***



ஆ..ஆ..ஆ.ஆ.ஆ.ஆ.
(Very Very Short Music)
ஹரே சாயி என்றே அழைக்கும் 
உந்தன் நாமம் கண்ணை நனைக்கும் 
(2)
ஹரேசாயி...
(Music)
சாயி-உலகைப் பிரிந்த-பிறகே 
எந்தன்-மனமே பொங்கும்-உலையே
(2)
மண்ணில்-இறங்கி கண்ணீர்-துடைநீ (2)
நெஞ்சின் தணலை வந்தே அணை-நீ (2)
ஹரே சாயி என்றே அழைக்கும் 
உந்தன் நாமம் கண்ணை நனைக்கும்  
ஹரேசாயி...
(Music)
என்னைத் தடுத்தே உன்னைக் கொடுத்தாய் 
உள்ளம் புகுந்தே அங்கும் நிறைந்தாய் 
(2)
அன்பை அளித்தே உலகில் இருந்தாய்
மண்ணைப் பிரிந்தே எங்கோ பறந்தாய்.. 
 (2)
ஹரே சாயி என்றே அழைக்கும் 
உந்தன் நாமம் கண்ணை நனைக்கும்  
ஹரேசாயி...


Thursday, April 20, 2017

75.ப்ரபோ சாயி என்றே (ஒரே பாடல் உன்னை அழைக்கும்)***



ஆ..ஆ..ஆ.ஆ.ஆ.ஆ.
(Very Very Short Music)
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும் 
(2)
ப்ரபோ சாயி...
(Music)
போதம்அளிக்கும் உந்தன்பாதம் வேதம்-ஆகும் உந்தன்-நாதம்(2)
கண்ணீர்-துடைக்க  மண்ணில் இறங்கி(2)
நெஞ்சில் எழுந்தாய் தஞ்சம் கொடுத்தாய் 
நெஞ்சில் எழும் தாய் தஞ்சம் கொடுத்தாய் 
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும்
ப்ரபோ சாயி...
(Music)
மண்ணில் நடந்தாய் தன்னைக் கொடுத்தாய்
உள்ளம் முழுதும் நீயே நிறைந்தாய்
 (2)
அன்னை  எனவே உலகில் இருந்தாய்
அன்பைக் கொடுத்தாய் அன்பாய் றந்தாய் 
(2)
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும்
ப்ரபோ சாயி...


*நெஞ்சில்எழுந்தாய்=நெஞ்சில் எழும் தாய்