Showing posts with label புள்ளையாரு போலிருந்து). Show all posts
Showing posts with label புள்ளையாரு போலிருந்து). Show all posts

Sunday, May 31, 2020

492. மனுசனாக வந்திருந்து(புள்ளையாரு போலிருந்து)



விருத்தம்

சாயி ராமனே அன்பின் வடிவானவனே

அன்னை வடிவோனே பக்தர்களைக் காப்பவனே

ஷீரடி பிரானே ஆண்டவனே சாயீசா ..சாயீசா

என் கீதம் கேளுமைய்யா இந்த பிள்ளை குறை கேளுமைய்யா ..ஆ..

ஹோய்.. ஹோய்

 (SM)

மனுசனாக வந்திருந்து நமக்கு-அன்பு ஊட்டி-விட்ட சாயி-யாரு அந்த சாயி-யாரு

சாயி-யாரு அந்த சாயி-யாரு + (SM)

மானிடனின் வேஷத்திலே நடமாட-லோகத்திலே

மானிடனின் வேஷத்திலே நடமாட-லோகத்திலே

வாட்டம்-கொண்ட பேர்க்கு-எல்லாம் உதவிசெஞ்சாரு-சாயி -உதவிசெஞ்சாரு

எந்தப் பாகுபாடும்-இல்லாம அன்பைப்-பொழிஞ்சாரு-

மழையா அன்பைப்-பொழிஞ்சாரு

மழையா அன்பைப்-பொழிஞ்சாரு

  மனுசனாக வந்திருந்து நமக்கு-அன்பு ஊட்டி விட்ட சாயி யாரு –அந்த சாயி யாரு

சாயி யாரு அந்த சாயி யாரு

அடடா..! தானாய் இறங்கி-வந்து அனுதினமும் அருள்-சொரிந்து

அழகு-நடை போட்டு-வந்து கைகளிலே நீறளித்து

தர்மம்-சொல்ல உலகத்திலே .. ஒரு-தாயாய் தந்தையாய்

அன்பளித்த ஸ்வாமி உன்னை

யாருன்னு கேட்டிருக்கும் இவங்க-அறியாமை பாருங்கப்பா

நீதான் வந்திவர்க்கு  சொல்லணும்ப்பா

ஹோய்.. ஹோய்

நாமறிவோம் ஸ்வாமியினை இருள்-விளக்கும் சூரியனை

உன்-அறிவைச் சோதிக்கவே நாங்க-வந்தோமே

உனக்கு-என்ன தெரியும்-என்று கேட்க வந்தோமே

ஓ..அப்படியா..விஷயம்

 மண்ணில்-வந்த சூரியனோ என்பதுபோல் நடம்-புரிந்த -

ஸ்வாமி யாரு அந்த சாயி-யாரு

ஸ்வாமி யாரு அந்த சாயி-யாரு

(SM)

வானத்திலே-இருந்துகிட்டு படுக்கையிலே தூங்கிக்கிட்டு இருப்பதில்லை என்றைக்குமே ஆண்டவனும்

தானாய் இறங்கி-வந்து அவதரிப்பான்-மானிடனாய்

சாயிபிரான் சாயிபிரான் ஆண்டவனே ஆண்டவனே

 

மண்ணில்-வந்த சூரியனோ என்பதுபோல் நடம்-புரிந்த -

தெய்வம் தானே சாயி தெய்வம்-தானே

தெய்வம்-தானே சாயி தெய்வம்-தானே

ஓம்..ஓம்..

அண்ணனுக்கும் புரியுதடி சாயி-பேரும் தெரியுதடி  

அண்ணனுக்கும் புரியுதடி சாயி-பேரும் தெரியுதடி  

வா.. எல்லோரும் சேர்ந்திடுவோம் சாயி நாமம் பாடிடுவோம்

ஓம்..சாயிராம் ஓம்..சாயிராம்

ஜெய்சாய்ராம்..ஜெய்சாய்ராம்

சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்

ஜெய்ஜெய்சாய்ராம்.. ஜெய்ஜெய்சாய்ராம் 

சாயிராம் .. சாயிராம்