Showing posts with label மலர்ந்தும் மலராத. Show all posts
Showing posts with label மலர்ந்தும் மலராத. Show all posts

Saturday, January 22, 2022

578. அழகுச் சிலை போல(மலர்ந்தும் மலராத) **

 அழகுச் சிலை போல மெழுகு நடை போட்டு நடந்து மண்மீதிலே
வந்து கண்ணே பங்காரு என்று குரலாலே  வருடுவாய் காதிலே
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
மனதினிக்கும் பெயர்-சாயி சாயி எனக்கூறி தொடங்கும் உயர்யோகமே
(SM)

(MUSIC)

அன்பின் துணை கொண்டு பண்பை மனம்தந்து மாற்றம் புரிந்தாயய்யா மன மாற்றம் புரிந்தாயய்யா
இந்த உலகில் நீ ஒன்றி பேதம் துளி இன்றி சேவை புரிந்தாய் ஐய்யா பாதை தந்தாய் அய்யா 
இந்த உலகில் நீ ஒன்றி பேதம் துளி இன்றி 
இந்த உலகில் நீ ஒன்றி
பேதம் துளி இன்றி 
சேவை புரிந்தாய் ஐய்யா
(SM)
உந்தன் அவதாரம் என்ற நிஜம் எண்ணி மாந்தர் பயம் காட்டுவார் 
உனைக் கண்டு பயம் காட்டுவார்
நீயும் அந்த பயம்  போக தந்தை வடிவாக அணைத்து இதம் காட்டுவாய் மனதில் இதம் கூட்டுவாய்  
நீயும் அந்த பயம்  போக தந்தை வடிவாக
நீயும் அந்த பயம்  போக  
தந்தை வடிவாக 
அணைத்து இதம் காட்டுவாய்
(music)
தமிழில் குளிப்பாட்டி இசையில் உனைப்பாடி நடத்தும் அபிஷேகமே
மனதினிக்கும் பெயர்-சாயி சாயி எனக்கூறி தொடங்கும் உயர்யோகமே
(music)

பிறகு எனக்கூறி இறைவன் உனைப்-போற்ற மறந்த எனைக் காக்க வா
உன்னை மறுக்காத ஞானம் நீ தந்து பிள்ளை எனைத் தூக்க வா
பிள்ளை எனைத் தூக்க வா
என்னை சேய்-போல உன்னை தாய் போல நினைத்து பொறுப்பாய் ஐயா
எந்தன் ஜென்மம்-கடைத்தேறும் வழியை-மறுக்காமல் அருளிச் செய்-சாயிராம் 
அய்யே அருளிச் செய்-சாயிராம் 
சாயி ராம்ராம சாயி ராம்ராம சாயி ராம்ராமராம் 
சத்ய சாயி ராம்ராம சாயி ராம்ராம சாயி ராம்ராமராம்
சத்ய சாயி ராம்-ராம ராம் ..

சாயி கீதம்-6

முதல்பக்கம்

Sunday, March 20, 2016

35. மலரில்உயிராக புகழ் (மலர்ந்தும் மலராத) ***

மலரில்உயிராக உயிரின்மலராக எழுந்த ஒளிவெள்ளமே
வந்து புவியில்சிறப்பாக புரிந்த பலதொண்டு
சொல்ல யுகம் செல்லுமே 
விதியில்விளையாத மனித உடல்கொண்டு நடந்த இறைத்தோன்றலே
உந்தன்மனதின் அன்பாலே உயிரின் உள்சென்று
நிறைந்த ஒளித்தென்றலே
(Music)

மலரில்உயிராக உயிரின்மலராக எழுந்த ஒளிவெள்ளமே

வந்து புவியில்சிறப்பாக புரிந்த பலதொண்டு
சொல்ல யுகம் செல்லுமே 
விதியில்விளையாத மனித உடல்கொண்டு நடந்த இறைத்தோன்றலே
உந்தன்மனதின் அன்பாலே உயிரின் உள்சென்று நிறைந்த ஒளித்தென்றலே 
(Music)

தேவர் படைகொண்டு வானில் இல்லாமல் மண்ணில் பிறந்தாயடா.. 
இந்த மண்ணில் பிறந்தாயடா (Very Short Music)
வந்து-கருணை மனம்கொண்டு அருளை-தினம்தந்து 
ஓங்கச் செய்தாயடா (2) (Very Short Music)
வந்து-கருணை மனம்கொண்டு அருளை-தினம்தந்து...
(Short Music)
வந்து-கருணை மனம்கொண்டு.. (Very Short Music)
அருளை-தினம்தந்து..(Very Short Music)
ஓங்கச் செய்தாயடா..(Very Short Music)
(Music)
வைர வைடூர்யம் தங்க மணியாவும் உனக்கு ஈடாகுமா
சாயிஉனக்கு ஈடாகுமா
(Very Short Music)
வாடும் பிள்ளை எனக்காக அன்பின் வடிவாக 
உலகில் வருவாயடா(2)
(Very Short Music)
வாடும் பிள்ளை எனக்காக அன்பின் வடிவாக 
(Very Short Music)
வாடும் பிள்ளை எனக்காக (Very Short Music) 
அன்பின் வடிவாக (Very Short Music)
உலகில் வருவாயடா
(Music)
விதியில்விளையாத மனித உடல்கொண்டு நடந்த இறைத்தோன்றலே
உந்தன்மனதின் அன்பாலே உயிரின் உள்சென்று
நிறைந்த ஒளித்தென்றலே
(Music)
மனதில்தயைகூடி விரைவில்எனைத்தேடி பிறந்துவருவாயடா
தினமும்அழுதேங்கி உலர்ந்த கண்பார்த்து இறங்கிவருவாயடா 
இறங்கி வருவாயடா
கண்ணில் மணியாகப் புண்ணில் மருந்தாக 
எமக்கு இருந்தாயடா
இந்த மண்ணில்உனையன்றி வேறு துணைஏது 
மீண்டும் வருவாயடா
சாயி ... மீண்டும் வருவாயடா
ம்.. ம்
மண்ணில் சாயி நீ வாராய்..பாபா நீவாராய்..அன்பில் வாராயடா 
மண்ணில் சாயி நீ வாராய்..பாபா நீவாராய்..அன்பில் வாராயடா