Showing posts with label தஞ்சை பெரிய கோயில். Show all posts
Showing posts with label தஞ்சை பெரிய கோயில். Show all posts

Saturday, May 30, 2020

370. உன் கை உதிரும் நீறில் ( தஞ்சை பெரிய கோயில் )



விருத்தம்
ஓம்..சாயீஸ்வராய வித்மஹே 
சத்ய தேவாய தீமஹி 
தன்ன சர்வ ப்ரஜோதயாத்
(2)
____________

அன்பில் நீரளித்து வாழ்வளித்த சாயி பிரானே நீ வா வா ஆ.ஆ..
அனுதினமும் காட்சி தந்து காப்பவனே நீ வா வா.. ஆ.ஆ..
சந்நிதிக்கு வருபவர்க்கு அருள்நிதியைத் தருகின்ற பர்த்திபுரி ஷீரடி புரி நாயகனே  நீ  வா வா.. ஆ.ஆ..
கெஞ்சி வரும் பக்தருக்கு அஞ்சேல்என்று அபயம் தந்து 
அன்பினைப் பாரில் அள்ளித் தந்த 
ஷிரடி சத்ய ப்ரேம சாயிராம் நீ வா வா
(Short Music)
 உன்கை உதிரும் நீறில் வல்வினைகள் போகுமே (3)
ஊரணியின் ஊற்றாக அது என்றும் காக்குமே (2)
உன்கை உதிரும் நீறில் வல்வினைகள் போகுமே.. ஏ.. ஏ..
(MUSIC)
தினமும் நடந்து-தரும் எழில்காட்சியால்.. .ஆ.ஆ..
தினமும் நடந்து-தரும் எழில்காட்சியால் 
மனதில் புகுந்து புதுப்பொலிவை அதில் ஊட்டினாய் 
(2) 
வேண்டும் வரங்களைநீ..யேசாயிராம் (2)
என்றும் வேண்டத் தேவைஇன்றி அளித்தாய் ஐயா
வேண்டத் தேவைஇன்றி அளித்தாய் ஐயா 
என்றும் அளித்தாய் ஐயா
(MUSIC)
 ஆயர் குலத்துக்-கண்ணன் நீ தானையா.. .ஆ.ஆ..
 ஆயர் குலத்துக் கண்ணன் நீ தானையா
வில்லேந்தித் தந்தையின்-சொல்-காப்பாற்றினாய் 
அன்று வில்லேந்தித் தந்தையின்சொல்-காப்பாற்றினாய்
வாய்மையின் வடிவாகி அறிவூட்டினாய்.. ஆ.ஆ..
வாய்மையின் வடிவாகி அறிவூட்டினாய்…
சாயி கலியினிலே நீ அன்பாகினாய்
கலியினிலே நீ அன்பாகினாய் 
சாயி அன்பாகினாய்
(MUSIC)
அருள்சேவை புரிந்தே நீ வழி காட்டினாய்.. .ஆ.ஆ..
 அருள்சேவை புரிந்தே நீ வழி காட்டினாய்
பொருள் தேவை என்னாமல் அதைக் காட்டினாய் (2)
நோய் போக்க மருந்தகத்தை உருவாக்கினாய் (1+sm+1)
தாயைப் போலெமைக் காத்திட நடமாடினாய் (2)
உலகில் நடமாடினாய்
(Short Music)
உன்கை உதிரும் நீறில் வல்வினைகள் போகுமே 
ஊரணியின் ஊற்றாக அது என்றும் காக்குமே (2)
உன்கை உதிரும் நீறில் வல்வினைகள் போகுமே 

ஓம்..சாயீஸ்வராய வித்மஹே 
சத்ய தேவாய தீமஹி 
தன்ன சர்வ ப்ரஜோதயாத்
(3)