Showing posts with label நீயும் நானுமா கண்ணா. Show all posts
Showing posts with label நீயும் நானுமா கண்ணா. Show all posts

Tuesday, May 2, 2017

242. மீண்டும் பூமிவா பாபா (நீயும் நானுமா கண்ணா)**




பாபா..! 
(short mosic)
மீண்டும் பூமி வா பாபா தாய்-நீ அல்லவா (2)
காலம் மாறினால் உன்முகம் மறக்குமா (2) …Never..!
மீண்டும் பூமி வா பாபா தாய்-நீ அல்லவா
(MUSIC)
அறிவைக் கொடுக்கவோர் பல்கலைக் கழகமும் (2)
பார்மேல் கொடுத்த-நீர் தீர்த்ததே தாகமும்
நடந்தது அந்தநாள் மகிழ்ந்ததே பாரதம் (2)
நாளைய பாரதம் காணவா-சீக்கிரம் … வா ..
மீண்டும் பூமி-வா பாபா தாய்-நீ அல்லவா
(MUSIC)
ஐந்தடி உடற்-கூட்டால் ஆண்டனை உலகினை (2)
ஆள-நீ கொண்டதோ அன்பெனும் ஒன்றையே
வந்து என்-சாயிராம் அன்பெனும் நெஞ்சிலே (2)
பூணு அவதாரமே பிறப்பாய்-உலகிலே …பாபா..!
மீண்டும் பூமி-வா பாபா தாய்-நீ அல்லவா
(MUSIC)
அன்பென்..ற உன்-பதம் சதிராட உலகிலே
பிறந்திடு விரைந்து-ஓர் பிள்ளையின் வடிவிலே
(MUSIC)
அன்பென்..ற உன்பதம் சதிராட உலகிலே
பிறந்திடு விரைந்து-ஓர் பிள்ளையின் வடிவிலே
காணட்டும் பாரெல்லாம் ப்ரேமையுன் வடிவையே
அருளிறை இருப்பது காட்டவா உலகிலே