Showing posts with label அன்பே வா. Show all posts
Showing posts with label அன்பே வா. Show all posts

Friday, November 14, 2025

669.முன்பே வா(அன்பே வா)

 

முன்பே வா..முன்பே வா..முன்பே வா முன்பே வா வா
(Music)
நெஞ்சம் எரித்திடும் வேதனயால் சாம்பல் ஆகும் முன்பே வா
(2)
கண்கள் பெருக்கிடும்  நீரதனால்  கடல்கள் தோன்றும் முன்பே வா
(2)
முன்பே வா முன்பே வா வா வா
(2)
(Music)
நீ நினைத்தால் என் வேதனை தீர்ந்து விடும்
அருள் கொடுத்தால் என் அழுகையும் நின்றுவிடும்
நான் உனையே கேட்கவில்லை
ஏன் அழைத்தாய் புரியவில்லை
பதில் இன்னும் கிடைக்கவில்லை
சோதனையைத் தாங்கிடவே என் மனம் முதிரவில்லை 
நெஞ்சை எரித்திடும் வேதனையில் சாம்பல் ஆகும் முன்பே வா
கண்ணில் பொங்கிடும் நீரினிலே கடல்கள் தோன்றும் முன்பே வா
முன்பே வா முன்பே வா வா வா
(Music)
நான் சிறுவன் என நினைத்தே எனக்கருள்வாய்
கண்பார்த்தே என் சிறுமையைப் பொறுத்திடுவாய்
ஆசையினை மூட்டி விட்டே
தூங்குமெனை எழுப்பி விட்டே
நீ விளையாடுவதேன்
விழுந்த மனம் நிமிர்ந்து எழ யாரிடம் நான் அழுவேன்
முன்பே வா வா .. முன்பே வா முன்பே வா வா


சாயி கீதம்-7
முதல்பக்கம்

Friday, August 11, 2023

641.நீயே தான்..நீயே தான்(அன்பே வா) **

 

நீயே தான்..நீயே தான்

நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)

ப்ரேமை என்றொரு பேரினிலே அன்னை என்றால் நீ யேதான் (2)
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் எந்தாய் நீயேதான்
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் சாயி நீயேதான்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)
நீ நினைத்தால் உன் பணி செய்ய தேவர்களும் 
உன் விழியசைந்தால் பல கணங்களும் திரண்டிடுவர்
ஆயினும் நீ அமரவில்லை பகல் இரவு தூங்கவில்லை
ஓய்ச்சலும் உனக்கு இல்லை 
ஆதரவாய் ப்ரேமை தரும் உனக்கிணை யாருமில்லை
ப்ரேமை என்றொரு பேரினிலே அன்னை என்றால் நீ யேதான்
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் சாயி நீயேதான்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)
நான் இறைவன் என உரைத்தே எதிரில் வந்தாய்
நீயும்-அதே என எவர்க்கும் எடுத்துரைத்தாய்
ஞானத்தையே அளித்திடவே நான்-உலகில் அவதரித்தேன்
மோக்ஷத்தை நான் அளிப்பேன் 
எனது பணி எனக்கு இனி இதுவென சூளுரைத்தாய்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...


Other SONGS Recorded

முதல் பக்கம்