Showing posts with label ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி. Show all posts
Showing posts with label ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி. Show all posts

Sunday, May 31, 2020

455. தோம் தினத்தோம் (ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி) **



தோம்-தினத்தோம் தித்தோம்-தித்தோம்  தகதிமிதோம் தித்தோம் தித்தோம்  

தகதிமிதோம் தகதிமிதோம் தகிட தகிட தோம்  + (SM)

தோம்-தினத்-தோம் தாளம் தட்டி தகதிமிதோம் மேளம் கொட்டி

ஆடிடுவோம் சாயிகீதப் பாட்டுப் பாடி +தோம்.தோம்..தோம்

தோம் தினத்-தோம் தாளம் தட்டி தகதிமிதோம் மேளம் கொட்டி

ஆடிடுவோம் சாயிகீதப் பாட்டுப் பாடி

சாயிநாமம் தன்னச்சொல்லி சாயிராமன் புகழச்சொல்லி ஆடிடுவோம் ஓடிடுவோம் பாதம் தேடி

(2)

 ஓம் சாயிராம் சாயிராம் சத்ய சாயிராம்

ஓம் சாயிராம் சாயிராம் ஷிரடீ சாய்ராம்

(SM)

தோம்-தினத்-தோம் தாளம்-தட்டி தகதிமிதோம் மேளம்-கொட்டி

ஆடிடுவோம் சாயிகீதப் பாட்டுப் பாடி

(MUSIC)

சாயிராமன்  நாமம்-ஒண்ணே  கதிங்க

உலகில் அதோ-கதி என்பவர்க்கும் அதேங்க

(2)

சாயி-நாமம் இருக்கையில் கணமும்-நாவில் ஜபிக்கையில்

மரணம்-என்னும் பயம்-நமக்கு எதற்கு

அதை நினைத்துக்கொண்டால் இருக்கு மறந்துவிட்டால் பிணக்கு

என்பதெல்லாம் ஆசாமிகள் செருக்கு

அது-போல்-*இருமா ஸ்வாமி-சாயி  கணக்கு

 ஓம் சாயிராம்-சாயிராம் சத்யசாயிராம்

ஓம் சாயிராம்சாயிராம் ஷிரடீ சாய்ராம்

(MUSIC)

சொன்னாக்கா வினைகள் போகும் பறந்து 

தேனா இனிக்காதோ நாமம் என்ற விருந்து

(2)

நாக்கிலிறை பேர்கொண்டு கையில்-சேவை சீர்கொண்டு

வாழு என்ற சாயிபிரான் வாக்கு

(1+sm+1)

போல நடந்துகிட்டா-சிறப்பு பிறகு-அவன் பொறுப்பு

என்றாக்கா உனக்கு ஏது பொறப்பு

இனி எல்லாமே சாயிராமன் பொறுப்பு

ஓம் சாயிராம்-சாயிராம் சத்யசாயிராம்

ஓம் சாயிராம்சாயிராம் ஷிரடீ சாய்ராம் + (END MUSIC)


Saturday, May 30, 2020

434. செஞ்சுருட்டிக் குரலில் ஏமி(ஜின்ஜினுக்கான் சின்னக் கிளி) **



சாயிராமசாயிராம சாயிராமசாயிராமசாயிராமசாயிராம சாயிராமராம்  
செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி
ஓம்… ஓம்… ஓம் ஓம் ஓம்
செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி

வாடுகின்ற மக்களிடம் தேடிச்சென்று கையில்வரும் 
நீறளித்துப் பார்த்துக்கொண்டான் பாசத்தோட  
(2)
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே
(SM)
 செஞ்சுருட்டிக் குரலில்-ஏமி என்று-கொஞ்சி நம்ம-ஸ்வாமி 
அன்பக்-கொட்டி ஆட்சி-செஞ்சான் இந்த-பூமி 
(MUSIC)
லோகத்திலே யாவருமே ஹரிங்க 
என்று புரிஞ்சு-நல்லா அன்பு-சேவை புரிங்க 
(2) 
அன்பு-சேவை ரெண்டு-கையில் கடவுள்-நாமம் உண்டு-வாயில் 
என்று-சொன்ன சாயி-வேதம் படிங்க 
இதைக் கொண்டிடுவோர்-தனக்குத் தீர்ந்து-போகும் பிணக்கு
கொறஞ்சு-போகும் அவங்க-பாவக் கணக்கு
நல்லா கொறஞ்சு-போகும் அவங்க-பாவக் கணக்கு
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே
(MUSIC)
பார்த்தாக்கா எளிதாத்தான் இருக்கு 
ஆனா சாத்திரம்-பதி..னெட்டும்-உள்ள இருக்கு
(2)
பூமியிலே அன்பென்று பேர்-கொண்டு தான்-வந்து 
மாத்தி வெச்சான் நெஞ்சுக்குள்ள புகுந்து
(2)
 இப்போ சாயிராமன் சிறப்பு பாரெங்கிலும் இருக்கு
நல்லாத்தான் ஆயிடுச்சு-மனசு ஒரு கல்லாத்தான் இருந்த நம்ம-மனசு 
அவன் சாமிதான் சாமிதான் ஐயம் இல்லே 
இதை நம்பினா நம்பினா சோகம் இல்லே