Showing posts with label நாதஸ்வர ஓசையிலே. Show all posts
Showing posts with label நாதஸ்வர ஓசையிலே. Show all posts

Tuesday, May 19, 2020

287. மானச பஜ குருசரணம் (நாதஸ்வர ஓசையிலே) **



மா..னசபஜ குருசரணம் என்றுவந்து பாடிடைய்யா 
திருவுடலில் உலகத்திலே மீண்டும்நட..மாடிடைய்யா
மா..னசபஜ குருசரணம்
ஆஹாஹஹா.. ஆஹாஹஹா..ஆஹாஹஹா..ஆஹாஹஹா.. 
ஓலமிட்ட என்மனதில் உன்முகமே இருக்குதைய்யா (2)
ஞாலமுற்ற உன்நினைவு வந்து வந்து வாட்டுதைய்யா  
அழகாஉன் தரிசனத்தை எண்ணிஎண்ணி ஏங்குதைய்யா
சோகம்என்ன சாதனையா ஸ்வாமீஇது போதலையா
மா..னசபஜ குருசரணம் என்றுவந்து பாடிடைய்யா 
திருவுடலில் உலகத்திலே மீண்டும்நட..மாடிடைய்யா
மா..னசபஜ குருசரணம்
(MUSIC)
நான்துடித்து மண்புரண்டு புண்ணாகும் வேதனையை 
நீரசித்துப் பார்ப்பதுமே எத்தனைநாள் பார்த்திடுவேன்
(1+SM+1)
கைகொடுத்து எடுத்தணைக்கும் வேளைவரை காத்திருப்பேன்
சாயிபதம் காணும்வரை தொடர்ந்துபாடல் படித்திருப்பேன்
மா..னசபஜ குருசரணம்
(MUSIC)
உன்னை நீ தந்தனையா காலனுக்கு ஆளில்லையா 
சொற்பதத்தில் வடிக்கவொண்ணா சோகம்நெஞ்சைக் கொல்லுதைய்யா
சாதலினை நானும்கொண்டு வான்புகவே வேண்டும்என்று (2) 
சத்தியத்தின் வடிவினனே ஸ்வாமிவரம் தந்திடய்யா
மா..னசபஜ குருசரணம் என்றுவந்து பாடிடைய்யா 
திருவுடலில் உலகத்திலே மீண்டும்நட..மாடிடைய்யா
மா..னசபஜ குருசரணம் (BOTH)




Sunday, May 10, 2020

215. நாதபிந்து சாயி நமோ (நாதஸ்வர ஓசையிலே) *




நா..தபிந்துசாயிநமோ வேதமந்த்ரரூபநமோ  
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும்  ஸ்வாமிநமோ 
  நா..தபிந்துசாயிநமோ …
ஆஹாஹஹா ஆஹாஹஹா..ஆஹாஹஹா..ஆஹாஹஹா
லோகம்வந்த  இறைவனவன் எங்கும்நிறை ப்ரம்மமவன் (2)
பாதைவிட்டு நம்மனங்கள் ஓடிவிட்ட  வேளையிலும்
ஆறாகப்  பெருந்துயர்கள் நம்மனத்தில் வரும்பொழுதும்
ஓடிவந்து காத்திடுவான் சாயீ துணைநின்றிடுவான் 
 நாதபிந்து சாயிநமோ வேதமந்த்ர ரூபநமோ
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும்  ஸ்வாமிநமோ நாதபிந்து சாயிநமோ 
(MUSIC)
பையப்பைய பதமிரண்டும் மண்நடக்கும் தோரணையில்
சத்யசாயி ராமனவன் தரிசனத்தைக் கண்டுவிட
(Short music)
(2)
மெய்சிலிர்த்து உடல்குலுங்கும் நெஞ்சுருகும் அழுகையிலே
பூமிவரும் ஸ்வாமிநமோ வேதமந்த்ர ரூபநமோ
 நாதபிந்து சாயிநமோ …
(MUSIC)

அன்பில்ஒரு அன்னையுமாய் பண்புதரும் தந்தையுமாய் 
பொற்பதங்கள் காணவென்று பாட்டிலுன்னை வேண்டுகின்றோம்
மேதினியைக் காவல்கொண்டு  பார்நடத்த வருகஇன்று (2)
சத்தியத்தின் காவலனே ப்ரேமசாயி வடிவத்திலே   
நாதபிந்து சாயிநமோ வேதமந்த்ர ரூபநமோ  
அறம்குறையும் நேரத்திலே பூமீவரும்  ஸ்வாமிநமோ நாதபிந்து சாயிநமோ  (BOTH)












Wednesday, May 10, 2017

288. வேதஸ்வர நாதமதே (நாதஸ்வர ஓசையிலே)*



வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே 
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே 
வேதஸ்வர நாதமதே
ஆஹாஹஹா.. ஆஹாஹஹா..ஆஹாஹஹா..ஆஹாஹஹா.. 
ஓலமிட்ட கஜனின்உயிர் கணப்பொழுதில் காத்தததே (2) 
சேலைதொட்டு துச்சனவன் வேலிதாண்டும் வேளையிலும்
தேறாத-கௌரவர்கள் வாழ்வழிக்க வரும்பொழுதும் 
ஓடிவந்து காத்தததே சாயிக்ருஷ்ண நாமமதே
வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே 
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே
  (MUSIC)
பொய்விடுத்துக் கண்ணிரண்டில் நீர்சோர சேவையினை 
கைப்பிடித்து நாமமதை நாம்-தினமும் சொல்லிவர 

மெய்விளங்கும் வழிபிறக்கும் சொல்லவொணா ஜோதியிலே 
சாயிபதம் கண்டிடலாம் காலபயம் வென்றிடலாம்
வேதஸ்வர நாதமதே ஞானபோத சாரமதே 
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே 
வேதஸ்வர நாதமதே
(END)




வேதஸ்வர நாதமதே
(MUSIC)
கல்லில்-தரும் ஈரமய்யா  நெல்லில்-அது சாரமய்யா 
கற்பகமும்ஆகவந்து யாதும்தரும் நாமமய்யா 
மேதினியைத் தோற்றம்செய்து பிறகதனை வாழவைக்கும் (2) 
சத்தியத்தின் தோற்றமதே சாயிஎனும் நாமமதே
வேதஸ்வர நாதமதே ஞான போத சாரமதே 
இருமையிலும் காப்பததே சாயீஎனும் நாமமதே 
வேதஸ்வர நாதமதே