Showing posts with label நான் அனுப்புவது கடிதம் அல்ல. Show all posts
Showing posts with label நான் அனுப்புவது கடிதம் அல்ல. Show all posts

Sunday, May 31, 2020

457. நாம் உருகி (நான் அனுப்புவது கடிதம் அல்ல) **



நாம் உருகிச்-சாயி நாமம்-சொல்ல சொல்ல

பார் விலகிவிடும் பாபம்-மெல்ல மெல்ல

பேரின்பம் வரும் மனதும் துள்ள

(2) 

நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல

(MUSIC)

நிலவுக்கு நீ-பறக்கும் சிறகும்

நீருக்கு மேல்-நடக்கும் திறமும்

(2)

கொடுத்திடும் சாயிபிரான் நாமம் (2)

அதுவே பதஞ்சலியார் யோகம்  

மனதில் உருகிச்-சாயி நாமம்-சொல்ல சொல்ல

பார் விலகிவிடும் பாபம்-மெல்ல மெல்ல

பேரின்பம் வரும் மனதும் துள்ள

நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல

(MUSIC)

காட்டில் சென்று புரிவதொன்றா யோகம்

வழிபாட்டில் மட்டுமுண்டோ போதம்

(2)

சேவை-நன்றே புரிந்திடுவாய் போதும் (2)

இதுவல்லவோ சாயி-தரும் பாடம்

நாம் உருகிச்-சாயி நாமம்-சொல்ல சொல்ல

பார் விலகிவிடும் பாபம்-மெல்ல மெல்ல

பேரின்பம் வரும் மனதும் துள்ள

நாம் உருகிச் சாயி நாமம் சொல்ல





456. வான் இருப்பதிலே(நான் அனுப்புவது கடிதம் அல்ல) **



வான் இருப்பதிலே பெருமை-என்ன உலகம்

அதில் இருப்பதனால் சிறுமை-அல்ல சாயீ

நீ வந்திடுவாய் மீண்டும்-மெல்ல

(2)

வான் இருப்பதிலே பெருமை-என்ன

(MUSIC)

தாய்-மடி சேர்ந்திடவே ஏங்கும்

சேய்விழி எப்படித்தான் தூங்கும்

(2)

உருக்கிடும் பிரிவு-என்னும் சோகம் (2)

போக்கிட வந்திடையா லோகம்   

 வான் இருப்பதிலே பெருமை-என்ன உலகம்

அதில் இருப்பதனால் சிறுமை-அல்ல சாயீ

நீ வந்திடுவாய் மீண்டும்-மெல்ல

வான் இருப்பதிலே பெருமை-என்ன

(MUSIC)

எத்தனேயோ பேர்-குருமார் என்றே

பிறருக்கறம் சொல்லிடுவார் நன்றே

(2)

உலவிடுவார் ஆயிரம்-பேர் கொண்டே (2)

அவ..ருன்-போல் தருவாரோ அன்பை

வான் இருப்பதிலே பெருமை-என்ன உலகம்

அதில் இருப்பதனால் சிறுமை-அல்ல சாயீ

நீ வந்திடுவாய் மீண்டும்-மெல்ல

வான் இருப்பதிலே பெருமை-என்ன