Showing posts with label வெள்ளிமலை மன்னவா. Show all posts
Showing posts with label வெள்ளிமலை மன்னவா. Show all posts

Friday, May 22, 2020

550. சாயி-பெயர் சொல்லவா (வெள்ளிமலை மன்னவா) **



சாயி-பெயர் சொல்லவா உய்யும்-வழி கொள்ளவா (2)
எல்லோர்க்கும் நல்லதாய்  கலியில்-அதைச் சொல்வதாம் (2)
சாயி-பெயர் சொல்லவா
 (MUSIC)
நாம-ஜபம் சிறியதில்லை யோகமென்றால் அரியதில்லை (2)
சாயி இரெண்டெழுத்தால் விலகிடுமாம் வினையின் தொல்லை  (2)
   
வேகமதைப் பூண்டு நீ திருப்பெயரைக் கூறு
(SM)
யோகமதே சான்று அதற்குண்டு-பல நூறு
வேகமதைப் பூண்டு நீ திருப்பெயரைக் கூறு
யோகமதே சான்று-அதற்குண்டு-பல நூறு
ஆ ...
சாயி-பெயர் சொல்லவா உய்யும்-வழி கொள்ளவா
எல்லோர்க்கும்-நல்லதாய்  கலியில்-அதைச் சொல்வதாம் 
சாயி-பெயர் சொல்லவா  .. ஆ ...




549. உள்ளத்துக்குள் உள்ளவா (வெள்ளிமலை மன்னவா) **



உள்ளத்துக்குள் உள்ளவா நாதன்-நீ அல்லவா (2)
எல்லோர்க்கும் சொந்தமாய் அன்புக்கரம் தந்தவா (2)
உள்ளத்துக்குள் உள்ளவா ..
(MUSIC)
ஆயிரங்கள் இருந்துமென்ன  ஆள் பலத்தால் அடைவதென்ன (2)
தாயாய் புகலளிக்கும்  சாயி உன்-தாள்  மறைந்த பின்னே (2)
   
சேயின் குரல் கேட்டு உன் திருமுகத்தைக் காட்டு 
காலம்-மிக ஆச்சு உன் திருக்குரலைக் கேட்டு
(2)
ஆ ...
உள்ளத்துக்குள் உள்ளவா நாதன்-நீ அல்லவா
எல்லோர்க்கும் சொந்தமாய் அன்புக்கரம் தந்தவா
உள்ளத்துக்குள் உள்ளவா ..