Showing posts with label ஆசையினாலே மனம். Show all posts
Showing posts with label ஆசையினாலே மனம். Show all posts

Saturday, May 9, 2020

181. ஆவலினாலே மனம் (ஆசையினாலே மனம்)



ஆவலினாலேமனம் நீவரக்கெஞ்சுது தினம்
சாயிஅன்பைச் சுவைத்தபின்னாலே ருசிகண்டுபோனதே மனம்
(2)
 (MUSIC)
பேசும் சொல்லில் அமுதம் தந்த எங்கள் சாயிமா
அதைநாளும் மீண்டும் நாங்கள் கேட்க மண்ணில் விரைந்துவா
(Short Music)
பேசும் சொல்லில் அமுதம் தந்த எங்கள் சாயிமா
அதைநாளும் மீண்டும் நாங்கள்கேட்க மண்ணில் விரைந்துவா
வானமுந்தன் உலகெனில் .... ஓஹொஹோ
நாங்கள் வந்திருப்போம்  விண்ணில்.. ஆஹஹா
ஆளில்லாமல் வருந்தும்பூமி நீரைப் பெருக்கிடும் கண்ணில்.. சாயி
ஆவலினாலேமனம் நீவரக்கெஞ்சுது தினம்
சாயிஅன்பைச் சுவைத்த பின்னாலே ருசிகண்டுபோனதே மனம்
(MUSIC)
காலை மற்றும்மாலை உந்தன்பாதம் காணவே
மனம்ஏங்கும் இன்றுவாராய் மண்ணில்விரைந்தே சாயிராம்
(2)
 (Short Music)
மண்ணில் வேண்டுமுந்தன் துணை.... ஓஹொஹோ
பூமியில் யாருனக்கிணை.. ஆஹஹா
கோடிசூர்ய ஒளியில்தோன்றி ஆண்டிடவாஇந்த மண்..ணை.... விரைவில்
ஆவலினாலேமனம் நீவரக்கெஞ்சுது தினம்
சாயிஅன்பைச் சுவைத்தபின்னாலே ருசிகண்டுபோனதே மனம்