Showing posts with label சின்னச் சின்ன கண்ணனுக்கு. Show all posts
Showing posts with label சின்னச் சின்ன கண்ணனுக்கு. Show all posts

Thursday, April 20, 2017

70.மண்பிறந்த உயிர்களுக்கு (சின்னச் சின்ன கண்ணனுக்கு)***

மண்பிறந்த-உயிர்களுக்கு எத்தனை வேதனையோ(2)
எண்ணிறந்த சோதனைகள் தீர்க்கும் வண்ணம் வந்தாய் சாயீ
மண்பிறந்த உயிர்களுக்கு எத்தனை வேதனையோ(2)
(Music)
நெஞ்சினிக்கும் சொல்லினையே தேனைப்போல் தந்தவனே
வந்தளிக்கும் அருளினிலே துன்பங்கள் துடைத்தவனே
உன்தாளை நினைத்திடவே என்மனது ஓங்குதடா
உன்னுடன் வாழ்ந்திடவே உள்ளமே ஏங்குதடா   
எண்ணிறந்த சோதனைகள் தீர்க்கும் வண்ணம் வந்தாய் சாயீ
மண்பிறந்த உயிர்களுக்கு எத்தனை வேதனையோ(2)
(Music)
உலகினில் நடித்திடவே பிறந்திறை வந்ததடா
உயிர்களின் துயரினிலே விரைந்தது துடைக்குதடா
ஈரேழு உலகினிலே எங்குஉண்டு சாயிவழி
கள்ளமற்று வந்தஒளி உண்மைகொண்டு வந்ததினி  
எண்ணிறந்த சோதனைகள் தீர்க்கும் வண்ணம் வந்தாய் சாயீ
மண்பிறந்த உயிர்களுக்கு எத்தனை வேதனையோ(2)
(Music)
பூப்போன்ற நெஞ்சினிலே பூமிதன்னில் கொண்டதடா....
(Short Music)
நில்லாத உலகத்திலே மானிடத்தின் வேஷமடா
அன்புகொண்டு நம்மையெல்லாம் வென்றிருக்கும் ஸ்வாமியடா(2)
அன்னையாய் இருந்தவண்டா தன்னையே தந்தவண்டா
எண்ணிறந்தசோதனைகள் தீர்க்கும்வண்ணம்வந்தாய் சாயீ
மண்பிறந்த உயிர்களுக்கு எத்தனை வேதனையோ
எண்ணிறந்தசோதனைகள் தீர்க்கும்வண்ணம்வந்தாய் சாயீ