Showing posts with label மாமா மாமா மாமா. Show all posts
Showing posts with label மாமா மாமா மாமா. Show all posts

Friday, May 29, 2020

325. வாவா சாயி ராமா ( மாமா மாமா மாமா ) **



வாவா சாயி ராமா (2)
சாயி ராமா வாவா (2)
எட்டுபோல உடல்வளச்சு கட்டுப்பாட்டில் தினம்உழைச்சு 
அன்பு-சேவை செய்யச்-சொன்ன சாயிராமா 
எட்டுபோல உடல்வளச்சு கட்டுப்பாட்டில் தினம்உழைச்சு 
அன்புசேவை செய்யச்சொன்ன சாயிராமா 
சேவை செய்யும்போது ஓடிநீயும் போகலாமா 

வாவா சாயி ராமா (2)
தெலுங்கு-மொழி பாஷையில்தேன் சொட்டசொட்ட தந்துவிட்டு
சப்புகொட்டித் தின்னும்போது ஓடலாமா 
(2)
கையில் பட்டது-வாய் எட்டு-முன்னே தட்டலாமா
   சாயி ராமா வாவா (2) 
(MUSIC)
ஊரறிய நாடறிய தரிசனத்தை 
தினமும் கண்டு-தொழும் பயித்தியத்தை தந்துவிட்டு
(2)
தண்ணீராய் 
தண்ணீராய் திருநீறை வரும்ஆறாய்த் தருவாயே
அதனை மட்டும் என்றைக்குமே மறக்கலாமா
கதை முடியாமே பாதியில்நீ பறக்கலாமா  
வாவா சாயி ராமா (2) 
(MUSIC)
ஹோய்.. ஹோய்.. ஹோய்.. (2) 
(MUSIC)
நானிருப்பேன் மண்ணோடு என்றாயே 
வயசு தொண்ணூற்று நாலுஎன்று சொன்னாயே
(2)
ஆசை காட்டி.. பாசம் ஊட்டி 
ஆசைகாட்டி பாசம்ஊட்டி  இப்போ-எதோ கணக்குகாட்டி நீயும் செய்யும் மோசமுனக்கு ஞாயம்தானா 
இந்த வெற்றிஎன்ன உனக்கு-ரொம்ப அழகுதானா
சாயி ராமா வாவா (2)
 (MUSIC)
அன்னிக்கு-நீ பூமியிலே-அவதரிச்சு கையில் பூவெடுத்து -தரை..யில்உன் பேர்தொடுத்து (2)
சொன்னாயே..
சொன்னாயே தெய்வம்என நான்என்றும் உனக்குஎன 
அந்தபேச்சை  நம்பிநானும்  இருந்திட்டேன்-அய்யா
என்ன துன்னபோத்து ஆக்கி-கம்பி நீட்டிட்டே அய்யா
வாவா சாயி ராமா (2)
  (MUSIC)
ஹோய்.. ஹோய்.. ஹோய்..(2) 
    (MUSIC)
என்ன-விட்டு மண்ண விட்டு ஓடுறதும்  
அழகா என்ன-ஏய்ச்சு வக்கணையாத் தூங்குறதும்
(2)
இன்னும்-மென்ன எத்தன-நாள் விண்ணுலகு எத்தன-நாள்
என்று-பதில் எங்களிடம் சொல்லையா 
நெஞ்சம் வாடுகிறோம் வந்துமுன்னே நில்லையா நில்லையா 
வாவா வாவா வாவா 
வாவா சாயி ராமா
(Short Music)
எங்க-பாட்ட நிறுத்தாமே சோறுதண்ணி பாராமே
காத்திருக்கப் போறோம் நாங்க-இந்த உலகில் 
(2)
விரைவில் நீயாக… வராவிட்டால்… ஏது- துயில் ஏது- துயில் 
வாவா வாவா வாவா .. பாபா
வாவா வாவா வாவா
வாவா சாயி ராமா (2)