Showing posts with label காத்திருந்த கண்களே. Show all posts
Showing posts with label காத்திருந்த கண்களே. Show all posts

Friday, May 8, 2020

149. காத்திருப்போம் நீ வர (காத்திருந்த கண்களே) **


காத்திருப்போம் நீவர உனைநினைப்போம் சாயிராம்
சேவை செய்வோம் இனித்திட அன்பில் இதயம் உருகிட 
 (2)
சொல்லினிக்கும் தேன்பலா உலகில்இன்பம் உன்உலா
யாரிருந்தும் நீஇல்லா பாரில்ஏது சுவையெலாம்  
(2)
(MUSIC)
மெய்வடிவாக வந்தநம்சாயி ஆண்டவன் ஐயமென்ன
அவன்மானிடவேஷம் புனைந்ததனாலே அற்புதம்விளைந்ததென்ன
நாள்தோறும் கருணை விழிகளிலேதரும்  அன்பவன் தயவல்லவோ
ஒருகுரலினிலேதன் சேயிடம்பார்த்து வருகின்ற தாயல்லவோ
வருகின்ற  தாயல்லவோ
காத்திருப்போம் நீவர உனைநினைப்போம் சாயிராம்
சேவைசெய்வோம் அதுவரை ஏங்கிஉருகும் உள்ளமே
(MUSIC)
கைகளினாலே தொடுவதிலே-அவன் பூநெஞ்சம் அருள்வதென்ன 
அவன் கைகளும்-வானில் உயருவதாலே யாவும் கிடைப்பதென்ன

எவ்விதமேனும் துயர்துடைக்க அந்தசாயிராம் வருவதென்ன
நம்மைஅருகினில்அழைத்து தரிசனம்கொடுத்து 
மயக்கத்தை எடுப்பதென்ன .. மயக்கத்தை எடுப்பதென்ன
(SHORT MUSIC)
காத்திருப்போம் நீவர உனைநினைப்போம் சாயிராம் 
சேவை செய்வோம் அதுவரை ஏங்கி உருகும் உள்ளமே
 லால்ல லால்லா  லால்லாலா (BOTH)