Showing posts with label அம்மானை. Show all posts
Showing posts with label அம்மானை. Show all posts

Thursday, May 7, 2020

145. அம்மாவை ( அம்மானை ) **

அம்மாவைப் போலுலகில்இருந்தாயே (2)
நாடிப் புவி வா-தாயே வேண்டுகிறோம் வாசாயி வேண்டுகிறோம் வாசாயி
 (short Music)
நம்பியதுன்திருப்பாதமே நான்வாடிய சேய்வரு..வாய்இகம் (2)
விண்ணகமாடியபாதமே இந்தமண்ணகம் வாஇப்..போதிலே (2)
அம்மாவைப் போலுலகில்இருந்தாயே
நாடிப் புவி வா-தாயே வேண்டுகிறோம் வாசாயி வேண்டுகிறோம் வாசாயி
(MUSIC)
பாரினில் உறங்கிடும் உயிர்களை
விழித்தெழுப்பிடும்-அருள்தரும் உன்முகம்
(2)
தேனெனும் உன்மொழி செவிபெறும்
 அந்தஆசையில் ஏங்குது என்மனம்
(2)
உயரிய நான்மறைச்சாத்திரம்
உனை உணர்த்திடவே-ப்ரம்ம சூத்திரம்
(2)
 சொல்வதுஓர்துளி மாத்திரம்
அதன்கூற்றினில் அடங்குமோ உன்திறம்
(2)
அம்மாவைப் போலுலகில்இருந்தாயே
நாடிப் புவி வா-தாயே வேண்டுகிறோம் வாசாயி வேண்டுகிறோம் வாசாயி
(MUSIC)
பொன்னிற ஆதவன் நாணிட
அதை உன்னிரு கண்ணொளி வென்றிட
என்னிரு கண்களும் பனித்தன
அவை ஏக்கத்தில் உன்னடி தேடின  
 நன்மனச் சிந்தைகள் அழைத்தன
திருமந்திர சொற்களில் வழுத்தின
மானிடஉடலில்நீவந்திட இங்குஒன்றுமில்லை இனித் தடையென 
அம்மாவைப் போலுலகில்இருந்தாயே
நாடிப் புவி வா-தாயே வேண்டுகிறோம் வாசாயி வேண்டுகிறோம் வாசாயி