Showing posts with label எண்ணப் பறவை சிறகடித்து. Show all posts
Showing posts with label எண்ணப் பறவை சிறகடித்து. Show all posts

Tuesday, May 19, 2020

280. சின்னக் குழந்தை (எண்ணப் பறவை) **

சின்னக் குழந்தை மனமொடிந்து மண்ணில் துடிக்குதைய்யா 
உன் பிரிவுத்துயர் தனிலே-தினம் சாயி மடியுதைய்யா
 (1+SM+1)
 (MUSIC)
தென்றல் போலே நாளும்-நடந்து தரிசனம் தந்திடவா (2)
பிறகு தீஞ்சுவைக்குரலில் ப்ரேமஸ்வரூபா என்றே அழைத்திடவா (2)
(SM)
தீந்தமிழ்ப் பண்ணால் என்னுயிர்உன்னை அழைப்பது கேட்கலையா 
உண்மையறிந்தும் உன்னை மறந்தேன் பொறுத்திடு பொறுத்திடைய்யா
சின்னக் குழந்தை மனமொடிந்து மண்ணில் துடிக்குதைய்யா 
உன் பிரிவுத்துயர் தனிலே-தினம் சாயி மடியுதைய்யா
(MUSIC)
பூந்தளிர்ப் போலுன் அருட்கரம் தூக்கி அருளை வழங்கிட வா என்னை உரிமையினாலே துன்னபோத்..தென்றே அன்பில் அழைத்திடவா  
(SM)
அன்னையைப் போலே இவ்வுலகில்நீ அன்பைக் கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில்கொண்..டது போதும் போதும் அய்யா
சின்னக் குழந்தை மனமொடிந்து மண்ணில் துடிக்குதைய்யா 
உன் பிரிவுத்துயர் தனிலே-தினம் சாயி மடியுதைய்யா

Wednesday, May 10, 2017

281. சின்னக் குழந்தை (எண்ணப் பறவை சிறகடித்து)***

சின்னக்-குழந்தை வடிவத்திலே தெய்வம் பிறந்ததைய்யா
ஓர் இணையுமிலா நடிகன்-என மண்ணில் நடிக்குதைய்யா
 (1+SM+1)
(MUSIC)
இன்முகம்-காணும் போதே-உள்ளம் பாகாய் உருகுதைய்யா (2)
இமையில் நீந்திடும்-வண்டு விழியைக்கண்டாலே  இன்பம் பெருகுதைய்யா (2)
(SM)
புன்னகை-ஒன்றால் மன்னுயிர்-தன்னை கவர்ந்தது-இழுக்குதைய்யா
மண்ணைப்-படைத்து மண்ணில்-படுத்து மண்ணைம..யக்குதைய்யா
சின்னக்-குழந்தை வடிவத்திலே தெய்வம் பிறந்ததைய்யா
ஓர் இணையுமிலா நடிகன்-என மண்ணில் நடிக்குதைய்யா
(MUSIC)
பூமியின் மேலே தாயினைப் போலே மடியில் அணைக்குதையா
உள்ளம் உருகிப்-பண்ணாலே சாயி-என்றாலே அள்ளி அளிக்குதையா 
(SM)
மன்னுயிர்க்காக தன்னுடல் தன்னை வருத்திக் கொண்டதய்யா
பே..ரருள்தந்து-நம்  துயரம்-தன்னைக் கிள்ளி எடுத்ததைய்யா
சின்னக்-குழந்தை வடிவத்திலே தெய்வம் பிறந்ததைய்யா
ஓர் இணையுமிலா நடிகன்-என மண்ணில் நடிக்குதைய்யா

Sunday, March 20, 2016

33. சின்னக்குழந்தை (எண்ணப் பறவை சிறகடித்து)

சின்னக்குழந்தை உனைநினைந்து மண்ணில்-கலங்குதம்மா
உன்இதயத்திலே இரக்கம்வர இறைநீ-பிறந்திடம்மா
(1+SM+1)
(Music)
தாயேஉந்தன் விளையா..ட்டைநீ கொஞ்சம்-நிறுத்திடம்மா (2)
இன்றுநோயாய்-வந்த என்பாட்-டைநீ நெஞ்சில்-நினைத்திடம்மா(2)
(Short Music)
என்உயிர்இன்று பெருந்துயர்கொண்டு துடிப்பதுதெரியலையா
உன்னைநினைந்து உள்ளம்வருந்திக் கிடப்பதுபுரியலையா 
சின்னக்குழந்தை உனைநினைந்து மண்ணில்-கலங்குதம்மா
உன்இதயத்திலே இரக்கம்வர இறைநீ-பிறந்திடம்மா
(Music)
கெஞ்சலைக்கேட்டு உன்கரம்நீட்ட உலகில்பிறந்திடவா
என்னைப்ரேமையினாலே குழந்தையைப்போலே அள்ளிஅணைத்திடவா
(Music)
அன்னையும்நீயே உன்னுடன்சேய்கள் நாங்கள்இருந்திடவா
நீ கரு-ணை-யுடன் அவ-த-ரித்து உலகில்இருந்திடவா 
சின்னக்குழந்தை உனைநினைந்து மண்ணில்-கலங்குதம்மா
உன்இதயத்திலே இரக்கம்வர இறைநீ-பிறந்திடம்மா