Showing posts with label விழியே கதை எழுது. Show all posts
Showing posts with label விழியே கதை எழுது. Show all posts

Thursday, September 26, 2024

662.அன்பே .. என் வடிவு(விழியே கதை எழுது) **

அன்பே .. என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
என்றே நீயே   சொன்னாய் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
அன்பே யாவும் என்னும் சாயி உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
உனது மொழியமுதத் துளிகள் அது மனதில் கொடுக்குமின்ப அலைகள் (2)
மோனத்தில் என் கண்கள் மூடும் ஆனந்தத்..தில்-உள்ளம் மூழ்கும் 
உன் போலவே யார் பாரிலே
(music)
நாவில் உன் பேரது சொல்ல கண் மூடுது (2)
சேவையால்  செய்வது அந்த பூஜை தான் ஆனது
சேவைக்கு மேலேது பூஜை  முக்திக்கு வேறேதோ பாதை
உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
வேதம் சொல்கின்றது சாயி நீ சொன்னது (2)
காது கேட்கின்றது .. மனது பனிக்கின்றது
எண்ணத்தில் என்றும்-உன் தோற்றம் என் நெஞ்செத்தைப் பண் செய்யத் தூண்டும்
உன் போலவே யார் பாரிலே
(SM)
அன்பே ..என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
உன் போலவே யார் பாரிலே...

Friday, September 13, 2024

664.நீயே அன்பமுது(விழியே கதை எழுது) **

நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரய்யா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது உன் அன்புக் கண்-பார்க்கும் போது  
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

ப்ரேமை ஆறானது உலகில் ஆளானது (2)
பேரும் அதுவானது எங்கள் பேறும் அதுவானது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
ஓர் தாயைப் போலன்பின் சாயல்
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
உன் போலவே வேறாரய்யா..

Friday, September 6, 2024

659.எதிரே நடை பழகு(விழியே கதை எழுது) **

எதிரே ... நடை பழகு ... விண் மீதே ..இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
(music)

அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
எதிரே ... நடை பழகு ... விண்மீதே இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே கண் காணவே வா சாயிராம்
(music)

உனது தரிசனத்தில் சிலைகள் என அமர்ந்து அனுபவித்த கணங்கள் (2)
நில்லாமல் என் கண்கள் ஓடும் உன் பாதம் எங்கென்று தேடும்
கண் காணவே வா சாயிராம்

(music)

ப்ரேமை நீ தந்தது தந்தை நீ தந்தது (2)
நேரில் உனைக் காண்பது என்ற ஆசை நீ தந்தது
பிள்ளை-என் ஏக்கத்தைப் பாரு பங்காரு என்றே நீ கூறு
கண் காணவே வா சாயிராம்
எதிரே ... நடை பழகு ... விண் மீதே ..இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
(music)
பிள்ளை அழுகின்றது பாரில் தெரிகின்றது (2)
நேரில் நீ வந்திடு .. அள்ளி கையில் எடு
என்னத்தைக் கண்டாயோ வானில்
கண் கொண்டு பாராயோ பாரை
கண் காணவே வா சாயிராம்
எதிரே ...நடை பழகு ...விண்-மீதே இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
கண் காணவே வா சாயிராம்...

Other SONGS Recorded

முதல் பக்கம்