Showing posts with label காலங்களில் அவள் வசந்தம். Show all posts
Showing posts with label காலங்களில் அவள் வசந்தம். Show all posts

Wednesday, April 12, 2023

619. சாயி எனும் பெயர் கொண்டவன்(காலங்களில் அவள் வசந்தம்) **

சாயி எனும் பெயர் கொண்டனன் முழுவதும் அன்பென ஆகினன்
ப்ரேமை எனும் உயிர்-மூச்சினால் அனைவரையும் நிறைத்தானவன்
சாயி எனும் பெயர் கொண்டனன்
(MUSIC)

முகம்தனிலே அவன் பிறை-நிலா இன்பம் தரும் ஒளிப் பேரூற்று
ஓ..ஓ...
முகம்தனிலே அவன் பிறை-நிலா இன்பம் தரும் ஒளிப் பேரூற்று
கரம்தனிலே தருவானவன் (2)
அன்பினிலே திரு நீறு
சாயி எனும் பெயர் கொண்டனன் முழுவதும் அன்பென ஆகினன்
ப்ரேமை எனும் உயிர்-மூச்சினால் அனைவரையும் நிறைத்தானவன்
சாயி எனும் பெயர் கொண்டனன்
(MUSIC)

அவனே ப்ரேமைக்கு எல்லை அவன் சொல் மேல் இனிப்பெங்கும் இல்லை (2)
பொன்னே கண்மணி என்றே (2)
அவன் அழைக்கப் போகும் நெஞ்சு கொள்ளை 
சாயி எனும் பெயர் கொண்டனன் முழுவதும் அன்பென ஆகினன்
ப்ரேமை எனும் உயிர்-மூச்சினால் அனைவரையும் நிறைத்தானவன்
சாயி எனும் பெயர் கொண்டனன்

Wednesday, March 9, 2016

25. ஞாலங்களில்-முதற்க் காரணன் (காலங்களில் அவள் வசந்தம் )***

ஞாலங்களின்-முதற் காரணன்
ஞானத்திலே-அவன் பூரணன்
அவதரித்தே-வந்த நாரணன்
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின் முதற் காரணன்
(Music)
பாற்கடலில் அவன் துயில்பவன்
ஓம்-என்பதே அவன் தாலாட்டு ஒ .. ஒ ..ஒ..ஒ.ஓ..ஓ
பாற்கடலில் அவன் துயில்பவன்
ஓம்-என்பதே அவன் தாலாட்டு
ப்ரேமையிலே அவன் ஓர்கனி (2)
அவன் பெயர் தான் சத்ய சாயி 
ஞாலங்களின்-முதற்க் காரணன் 
ஞானத்திலே-அவன் பூரணன் 
அவதரித்தே-வந்த நாரணன் 
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின் முதற் காரணன் 
 (Music)
பால்போல் அவன்மனம் வெள்ளை
நல்லஇசைபோல் அவன்மொழிக் கிள்ளை
(2)
மலைபோல் எழுந்திடும் தொல்லை (2 )
அவன்-அருள்மழை..யால்-என்றும்-இல்லை
ஞாலங்களின்-முதற்க் காரணன் 
ஞானத்திலே-அவன் பூரணன்
அவதரித்தே-வந்த நாரணன் 
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின்-முதற் காரணன்