Showing posts with label உள்ளம் என்பது ஆமை. Show all posts
Showing posts with label உள்ளம் என்பது ஆமை. Show all posts

Thursday, February 17, 2022

585.உள்ளம் புகுந்தவர் சாயி(உள்ளம் என்பது ஆமை) **

உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
தொடரும் வினை இருள் வியாதி தனைப் போக்கும் அவர் அருள் ஜோதி (2)
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
(MUSIC)

தெய்வம் என்றாகினும் சாயி ஒரு மானிட ரூபத்தின் தாயே (2)
நம் வினை என்பது தீயே அதை அணைத்திடும் நீர் திரு நீறே
வினை விலக்கிடுமாம் திரு நீறே
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
(MUSIC)

பக்தியில் நெகிழ்ந்திடும் மனமும் அந்த நெகிழ்வினில் மெழுகெனும் குணமும் (2)
தா சாயி என வணங்கும் உந்தன் குழந்தைகள் சமிதியின் முழுதும்
குழந்தைகள் சமிதியில் முழுதும் 
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
தொடரும் வினை இருள் வியாதி தனைப் போக்கும் அவர் அருள் ஜோதி 
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி

சாயி கீதம்-6

முதல்பக்கம்

Sunday, May 31, 2020

471. நாவில் கொண்டிடு பேரை(உள்ளம் என்பது ஆமை) **

நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை

உன்னில் பெருகிடும் ஜோதி இது-சா..யிபி..ரான்-தந்த நீதி (2)

நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை

(MUSIC)

மண்ணில் வந்தார்-மா..னிடனாய் சாயி- ப்ரேமை-தந்..தாரே தாயாய் (2)

அன்பென்றால் அவர்-ஒன்று எல்லை-என்றால் அதற்கில்லை

எல்லை-என்றால் அதற்கில்லை

 நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை

(MUSIC)

தண்ணீர் கடல்போல் கொடுத்தார் கை-நீறால் துயரம் துடைத்தார்(2)

அவர்-ஓர் கடவுள்-எனவும் அவர்-அருளால் தானே புரியும்

அவர்-அரு..ளால்-தான் புரியும்

நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை

உன்னில் பெருகிடும் ஜோதி இது-சா..யிபி..ரான்-தந்த நீதி

நாவில் கொண்டிடு பேரை கரம்-தன்னில் கொண்டிரு சேவை