Thursday, February 17, 2022

585.உள்ளம் புகுந்தவர் சாயி(உள்ளம் என்பது ஆமை) **

உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
தொடரும் வினை இருள் வியாதி தனைப் போக்கும் அவர் அருள் ஜோதி (2)
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
(MUSIC)

தெய்வம் என்றாகினும் சாயி ஒரு மானிட ரூபத்தின் தாயே (2)
நம் வினை என்பது தீயே அதை அணைத்திடும் நீர் திரு நீறே
வினை விலக்கிடுமாம் திரு நீறே
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
(MUSIC)

பக்தியில் நெகிழ்ந்திடும் மனமும் அந்த நெகிழ்வினில் மெழுகெனும் குணமும் (2)
தா சாயி என வணங்கும் உந்தன் குழந்தைகள் சமிதியின் முழுதும்
குழந்தைகள் சமிதியில் முழுதும் 
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி
தொடரும் வினை இருள் வியாதி தனைப் போக்கும் அவர் அருள் ஜோதி 
உள்ளம் புகுந்தவர் சாயி நம் எண்ணம் நிறைந்தவர் சாயி

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment