Friday, February 18, 2022

586.சாயி எனும் பேரைக் கூறு(கவிதை அரங்கேறும் நேரம்) ***

சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
அதன் மேலும் உய் மார்க்கம் வேறு இப் பாரில் கிடையாது பாரு
சாயி எனும் பேரைக் கூறு
(MUSIC)

சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
அதன் மேலும் உய் மார்க்கம் வேறு இந்தப் பாரில் கிடையாது பாரு
சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
(SM)

நாமம் சொன்னாலே சடுதி எனத் தானே உண்டாகும் அமைதி (2)
அதன் பின்னே நின்றாடும் விகுதி அந்த பேறே ஆனந்த மிகுதி
நல் எண்ணம் கொண்டாடும் சொந்தம் பின் கிடைக்கும் இறையோடு சங்கம்
சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
(MUSIC)

நெஞ்சின் அன்பாலே நனைந்து உயர் சேவை செய்வாயே முனைந்து 
எனச் சொன்னார் நம் சாயி கனிந்து அந்த சொல்லே நல் வேதம் நமக்கு
தினம் சாயி திருநாமம் துணையே எனக் கொள்வாய் நீ மாய உலகில்
சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
(MUSIC)

போரில் சொன்னாரே கீதை அது போலே நம் சாயி பாதை
கொடும் போரில் நீ சென்றபோதும் அது ஒன்றே எந்நாளும் போதும்
நம் பிறவி போராட்டம் ஆனால் அதில் உதவும் ஸ்ரீ சாயி நாமம்
சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு
அதன் மேலும் உய் மார்க்கம் வேறு இப் பாரில் கிடையாது பாரு
சாயி எனும் பேரைக் கூறு அதனாலே பெரும் பேறைக் காணு

சாயி கீதம்-6

முதல்பக்கம்

No comments:

Post a Comment