Showing posts with label ஆடாமல் ஆடுகிறேன். Show all posts
Showing posts with label ஆடாமல் ஆடுகிறேன். Show all posts

Saturday, May 27, 2023

629.மாறாத அன்புடனே(ஆடாமல் ஆடுகிறேன்)**

 மாறாத அன்புடனே

மாறாத அன்புடனே
ஆறான நெஞ்சுடனே
சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா
மாறாத அன்புடனே ஆறான நெஞ்சுடனே
நாம் சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா வா வா வா..
(MUSIC)

அழுகின்ற கண் தேடி நீ ஓடுவாய் 
வழிகின்ற நீர் துடைத்து மனம் ஆற்றுவாய் 
இது யோகம் எனச் சொல்லி ஒளி ஏற்றினார் 
ஸ்ரீ சாயி கடைத்தேறும் வழி காட்டினார் .. வழி காட்டினார்
சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா
நாம் சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா
(MUSIC)
கரம் தன்னில் நல் சேவை நீ கொள்ளுவாய்
மனம் தன்னில் இறை பேரை நீ சொல்லுவாய் 
சாய்ராம். .. சாயி ராம்..
மனம் தன்னில் இறை பேரை நீ சொல்லுவாய் 
கரம் தன்னில் நல் சேவை நீ கொள்ளுவாய்  
எனச் சொல்லி நம் வாழ்வில் ஒளி ஏற்றினார் 
ஸ்ரீ சாயி கடைத்தேறும் வழி காட்டினார் .. வழி காட்டினார்
சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா
நாம் சேவைதனைச்  செய்திடுவோம் வா வா வா



Friday, May 19, 2023

625.கூறாமல் ஏற்றமில்லை(ஆடாமல் ஆடுகிறேன்)**

 
கூறாமல் ஏற்றமில்லை 
கூறாமல் ஏற்றமில்லை
பேராலே வாட்டமில்லை
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா 
கூறாமல் ஏற்றமில்லை பேராலே வாட்டமில்லை
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா வா வா..
(music)

பெயரே உன் விதி மாற்றும் சொல் சாயிராம்
உடனே வல் வினை போக்கும் பேர் சாயிராம்
ஜகமெங்கும் ஒலித்தோங்கும் ஓம் சாயிராம்
அது ஒன்று மனம் கூற பவம் போகுமாம் 
பவம் போகுமாம்
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா வா வா..
(music)

மனமே நீ தினம் சாயி பேர் கூறுவாய் 
அதுவே நான்-மறையென்று நீ ஓதுவாய் 
சாய்ராம். .. சாயி ராம்..
மனமே நீ தினம் சாயி பேர் கூறுவாய் 
அதுவே நல் மறையென்று நீ ஓதுவாய் 
அதை யோகம் என வாழ்வில் நீ பூணுவாய்  
அதன் மூலம்  இறை பாதம் நீ காணுவாய்
நீ காணுவாய்
சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா
நாம் சாயி பெயர் கூறிடுவோம் வா வா வா வா



Other SONGS Recorded

முதல் பக்கம்