Showing posts with label காற்றினிலே வரும் கீதம். Show all posts
Showing posts with label காற்றினிலே வரும் கீதம். Show all posts

Thursday, May 7, 2020

137. சாயி பிரான்..... வரும் நாளாம் ( காற்றினிலே வரும் கீதம்) ***


சாயி பிரான்..... வரும் நாளாம்.. சாயி பிரான் (விருத்தம்)
(Short Music)
சாயி பிரான்..... வரும் நாளாம்.. இன்று
சாயி பிரான் வரும் நாளாம்
மண்ணில் நடந்திடும்  அவன்அருள்பாதம் கொல்லும்வினைசென்று ஓடும் 
சாயி பிரான் வரும் நாளாம்
பட்ட துயர்கள்  ஒழிந்திடப்போகும் அவனொளி தோன்றுவதாலே  
கேட்டவரங்கள் எளிதேகொடுக்கும் அன்னையல்லவோ சாயி 
அன்பினிலே..அன்பினிலேதன் மடியினில்சேர்த்து இதமளித்திடும் தெய்வம் 
சாயி பிரான் வரும் நாளாம்
 (MUSIC)
இருள்போக்கிடும் காலைக்கதிரும்   வெட்கும் அவன் ஒளிமுன்  ஞானமதைநம் ஆராவமுதன் அள்ளிவழங்கிடுவான் 
ஆ..யர்பாடி கண்ணனும்சாயி இமயப்-பிறைசிவன்-சாயி 
சாயி பிரான் வரும் நாளாம்
சாயி பிரான் வரும் நாளாம்
பொல்லாதநெஞ்சம் அவன்வரக்கனியும் உலா..விடும்இறைசா..யி (2)
ஞாலம்கடந்த தூயவன்சாயி அவன்ஆண்ட..வன்தான் (2)
பாடிடுவோம்...
பாடிடுவோமவன் கருணையை எண்ணி கனியுமாம் அவன் உள்ளம்
சாயி பிரான் வரும் நாளாம் (2)
சாயி பிரான்.....



136. யார் தருவார் இனி பாசம் ( காற்றினிலே வரும் கீதம்) ***


யார் தருவார்..... இனி பாசம் .. யார் தருவார் (விருத்தம்)
(Short Music)
யார்தருவார் இனிபாசம் (2)
நெஞ்சம் இனித்திடும் சாயிஉன்நேசம்..என்றும்இனிக்கும் பாசம்
யார்தருவார் இனிபாசம்
விட்டுப்பறந்தனை எங்களின்  சாயி..வந்திருபுவிதனில் மீண்டும்
வாடும்மனங்கள் அழுதேகலங்கும் துயரம்நீவரப் போகும்
வந்திடுவாய் வந்திடுவாய்நீ புவியினில்இறங்கி
பணிந்து வேண்டுகிறோமே
யார்தருவார் இனிபாசம் 
(MUSIC)
துணைஎன்றிட வேறிலைகதியே மனம் இறங்..கிடுவாய்
கானமதில் எங்கள் ஆறாத்துயரில் இறங்கிவந்திடுவாய்
வே..றென்செய்வோம் வாயேன் சாயி வேண்டினோமுன்திருப் பாதம்
யார்தருவார் இனிபாசம்
யார்தருவார் இனிபாசம்
கல்லா உன்நெஞ்சம் இரங்கிடுசாயி உலாவமண்வரு..வாயே(2)
சோகமனத்தின் ஓலமுன்காதில் இன்னும்கேட்க..வில்லையா(2)
வாடுகிறோம் வாடுகிறோம்உன் வரவுக்குஏங்கி வந்திடுவாய்நீமீண்டும்
யார்தருவார் இனிபாசம் (2)
யார் தருவார்.....