Showing posts with label நினைக்கத் தெரிந்த மனமே. Show all posts
Showing posts with label நினைக்கத் தெரிந்த மனமே. Show all posts

Wednesday, April 19, 2023

622.அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி(நினைக்கத் தெரிந்த மனமே)

அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி என்று-அறியாயா
விளங்கும் ஞான விதையே சாயி என்று-புரியாயா
சாயி என்று-புரியாயா
(SM)
அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி என்று-அறியாயா
விளங்கும் ஞான விதையே சாயி என்று-புரியாயா
நெஞ்சே நீயும் அறியாயா

மயக்கம் அறுத்த அறிவே சாயி என்று-அறியாயா
மனதில் பிறக்கும் அன்பே சாயி என்று-புரியாயா
நெஞ்சே நீயும் அறியாயா
அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி என்று-அறியாயா
விளங்கும் ஞான விதையே சாயி என்று-புரியாயா
நெஞ்சே நீயும் அறியாயா
(MUSIC)

படைத்து உலகில் நிறைந்தான் அவனே என்று அறியாயா
கிடைத்த..தவனே-அளித்தான் நெஞ்சே உனக்குத் தெரியாதா
உனக்குள் மறைந்து கிடந்தான் என்றே உனக்குத் தெரியாதா
உயிரைப் படைக்கும் அன்பே அவனின் உருவம் அறியாயா
அன்பே சாயி அறியாயா  
அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி என்று-அறியாயா
விளங்கும் ஞான விதையே சாயி என்று-புரியாயா
நெஞ்சே நீயும் அறியாயா
(MUSIC)

கொதிக்கும்-சூர்ய ஒளியே நிலவின் குளிரும் அறியாயா
குளிரில்-உறையும் இதமும்  சாயி என்று அறியாயா
தெரிந்த எதுவும் அவன்தான் என்றே நீயும் அறியாயா
பிரிந்த பலதும் அவன்-தாள் ஒன்றே என்று அறியாயா
அவன்-தாள் ஒன்றே அறியாயா
அனைத்தும்-அறிந்த இறைவன் சாயி என்று-அறியாயா
விளங்கும் ஞான விதையே சாயி என்று-புரியாயா
நெஞ்சே நீயும் அறியாயா

Other SONGS Recorded

முதல் பக்கம் 

Tuesday, June 9, 2015

10. உலகில் பிறந்த இறையே (நினைக்கத் தெரிந்த மனமே ) ***

( நினைக்கத் தெரிந்த மனமே )

உலகில்பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச்சொரிந்தாயே
சாயீ அன்பைச் சொரிந்தாயே
(1+Short Music+1)
(Short Music) 

பிழைகள்யாவும் புரிந்தோம் சாயீ மறந்துஏற்றாயே
மலர்ந்த முகத்தில்அன்பை எமக்கு நிறையத்தந்தாயே
அன்பை நிறையத் தந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ  அன்பைச் சொரிந்தாயே
(Music)
எடுத்தஅபயக் கரத்தில் எமக்கு.. நீறைக் கொடுத்தாயே
படுத்தும் மனதின்நோயை  கணத்தில்.. விலக்கி எடுத்தாயே
அறிவில் சிறந்துவிளங்க.. எமக்கு கல்வி தந்தாயே
விரைவில் பசியும்-நீங்க எமக்கு உணவுதந் தாயே.. தாயே உணவு-தந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ  அன்பைச் சொரிந்தாயே
(Music)
கொதிக்கும் உயிரின் நெஞ்சை சாயீ குளிர வைத்தாயே
உறைந்து போன நெஞ்சில் சாயீ உயிரைத் தந்தாயே
உயிர்கள் உயரத் தேவை நெஞ்சில் சேவை என்றாயே
சேவை செய்து தாயே நீயும் உயரப் பறந்தாயே சாயீ உயரப் பறந்தாயே
உலகில் பிறந்த இறையே எமக்கு அருளைப் புரிந்தாயே..
அளவில்லாமல் சாயீ எமக்கு அன்பைச் சொரிந்தாயே

சாயீ அன்பைச் சொரிந்தாயே