Showing posts with label ஏ ழுகடல்சீமை அதை ஆளுகின்ற நேர்மை. Show all posts
Showing posts with label ஏ ழுகடல்சீமை அதை ஆளுகின்ற நேர்மை. Show all posts

Saturday, May 30, 2020

381. ஏழுலகின் சாமி (ஏ ழுகடல்சீமை அதை ஆளுகின்ற நேர்மை)

ஏழுலகின் சாமி நான் காட்டுகிறேன் வா நீ (2)
அது எங்கள்சாயி..ராம்தான் சத்யசாயி..ராம்தான்
அது எங்கள் சாயிராம் தான் சத்ய சாயிராம் தான்
(MUSIC)
உன்னையும்என்னையும் தோற்றிப்படைக்கிற ஆண்டவனும் இவன்தான்
விண்ணையும் மண்ணையும் தாண்டிவளர்கிற அந்தசிவன் இவன்தான்
ஓம்ஓம் சாம்ப-சதாசிவன்தான் (2)
ஆலிலை மேல்தவழ் புல்லாங்..குழல்எழில் சின்னக்கண்ணன் இவன்தான்
சாயி  நாலுயுகத்திலும் வந்தவதரிக்கும் தெய்வத்திருஉரு தான்  
ஓம்ஓம் சத்திய சாயி பிரான் (2)
ஏழுலகின் சாமி நான் காட்டுகிறேன் வா நீ
அது எங்கள்சாயி..ராம்தான் சத்யசாயி..ராம்தான்
அது எங்கள் சாயிராம் தான் சத்ய சாயிராம் தான்
(MUSIC)
வாத்தியத் தேனிசை தானாய் எழுந்ததோர் அற்புதம் அற்புதமே
அது அன்று-நடந்தது பர்த்தித் திருமகன் வந்து பிறக்கையிலே
நாதத்துக் காடிடும் மாலைச் சுமந்திடும் ஆதிசேஷன் எனவே
அந்த ஆதிசேஷன் எனவே
 ஒரு பாம்பு-நெளிந்தது பர்த்தியின்-மாலன்கி..டந்த  படுக்கையிலே
ஆமாம் அற்புதம் அற்புதமே.. ஆஹா அற்புதம் அற்புதமே
ஏழுலகின் சாமி நான் காட்டுகிறேன் வா நீ
அது எங்கள்சாயி..ராம்தான் சத்யசாயி..ராம்தான்
அது எங்கள் சாயிராம் தான் சத்ய சாயிராம் தான்
(MUSIC)
பூமிக்கு வந்தான் சேவை புரிஞ்சான் பாரடி பாரடியோ
அவன் ரொம்ப-சுளுவா செஞ்சுமுடிச்சான் அற்புதம் நூறடியோ
ஆமாம் சேவைகள் நூறடியோ. ஆஹா அற்புதம் பாரடியோ
காலையும் மாலையும் அன்புதரிசனம் வந்து கொடுப்பானைய்யா (2)
அதைக் கண்டு-மகிழ்ந்திட கோடிகோடி-ஜனம் வந்தலை மோதுமைய்யா
ஆமாம் வந்தலை-மோதுமைய்யா ஆஹா வந்ததைப் பாருமைய்யா
ஏழுலகின் சாமி நான் காட்டுகிறேன் வா நீ
அது எங்கள்சாயி..ராம்தான் சத்யசாயி..ராம்தான்
அது எங்கள் சாயிராம் தான் சத்ய சாயிராம் தான்