Showing posts with label கண்ணனிடம் கேட்டிருந்தேன். Show all posts
Showing posts with label கண்ணனிடம் கேட்டிருந்தேன். Show all posts

Sunday, May 31, 2020

482. சாயி ராம் திரும்பிடுவான்(கண்ணனிடம் கேட்டிருந்தேன்) **

சாயி ராம் திரும்பிடுவான் மண்ணுலகில் மீண்டும்

நம்மிடம் அன்றே தந்தான் சத்திய வாக்கு தானே

அவன்தரும்-வாக்கு பொய்யில்லை

அதில்-உரு..வாகும் பெரும்உண்மை

இல்லையே பொய்மை அவன் மெய்யில்

மெய்யிலே தோன்றும் அவன் வாய்மை

மானிட வேடம் பூண்டதனாலே

ஸ்வாமியை-நம்மைப் போல எண்ணாதே

சாயி ராம் திரும்பிடுவான் மண்ணுலகில் மீண்டும்

நம்மிடம் அன்றே தந்தான் சத்திய வாக்கு தானே

சாயி ராம் திரும்பிடுவான்

(MUSIC)

திருவிளையாட நம்-சாயி

வேடம்கொண்டானே அவன் தெய்வம்

தீர்த்து வைத்தானே  நம்-பித்தம் (2)

கண்டிட நாளும் அவன்-நடந்..தானே

கொண்டிட அன்பாய் நீறளித்தானே 

 சாயி ராம் திரும்பிடுவான் (3)

(MUSIC)

ராஜாதி ரா..ஜா மகராஜா என்று-விண்ணில்லாமல் பிறந்தானே

மண்ணிலே உன்னை என்னைப் போலே (2)

வேலை செய்தானே சேவை செய்தானே

அவன் போல் யாரும் உண்டோ நீ கூறு

  சாயி ராம் திரும்பிடுவான் மண்ணுலகில் மீண்டும்

நம்மிடம் அன்றே தந்தான் சத்திய வாக்கு தானே

சாயி ராம் திரும்பிடுவான் (3)