Showing posts with label பனி இல்லாத மார்கழியா. Show all posts
Showing posts with label பனி இல்லாத மார்கழியா. Show all posts

Saturday, April 22, 2017

77. இனிமேல் துன்பம் வந்திடுமா ( பனி இல்லாத மார்கழியா )***




ஆஆ..ஆஆ...ஆஆ..ஆஆ
(Short Music)
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதேவந்தான் சாயிபிரான் (2)
பிறப்பில்லாமல் வந்தவனாம் .. சிறப்பில்யாவும் கொண்டவனாம் (2)
இனிமேல்-துன்பம் வந்திடுமா.. இனிதேவந்தான் சாயிபிரா...ன்
(Music)
அழுக்கில்லாத தூயவனாம்..ஆசையில்லாத இறைபிறப்பாம்(2)
தீதில்லாத  நன்மையுமாம் .. கோதில்லாத உண்மையுமாம்
கோதில்லாத உண்மையுமாம்
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதே -வந்தான் சாயிபிரான்
பிறப்பில்லாமல் வந்தவனாம் .. சிறப்பில்யாவும் கொண்டவனாம்
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதே வந்தான் சாயிபிரான்
(Music)
ஆஹா..ஆஆ.ஆஆ..ஆஹா..ஆஆ.ஆஆ...ஆஹா..ஆஆ.ஆஆ
short Music
கரைகளில்லாத கருணைக்கடல்..கறைபடியாத இறையின்உடல்(2)
துலங்கும்ஒளியில் ஆதவனாம் .. பளிங்கின்வெண்மை அவன்இதயம்
பளிங்கின்வெண்மை அவன்இதயம்
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதே வந்தான் சாயிபிரா...ன்
(Music)
நிலையில்லாத உலகத்திலும்  நினைவில்ஆடும்  கலக்கத்திலும்(2)
மாயப்பிறப்பின்  வாட்டத்திலும்  காக்கும்எங்கள் சாயிபிரான்
காக்கும்எங்கள் சாயிபிரான்
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதே வந்தான் சாயிபிரான்
பிறப்பில்லாமல் வந்தவனாம் .. சிறப்பில்யாவும் கொண்டவனாம்
இனிமேல் துன்பம் வந்திடுமா.. இனிதே வந்தான் சாயி பிரா..ன்
(both)