Showing posts with label மௌனமே பார்வையால். Show all posts
Showing posts with label மௌனமே பார்வையால். Show all posts

Wednesday, January 7, 2026

671.தந்தையாய் தாயுமாய்(மௌனமே பார்வையால்)


தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே வாய்மையாய் என் கூட வந்த சாயி
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
1+(sm)+1
(MUSIC)

என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும் எது வேண்டும்
( SM)
என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும்
எந்தன் குரலில் உன்னைப் பாடும் அருள் மேல் வேறெந்த பேறு நான் பெற வேண்டும்
வேறெந்த பேறு ஏன் பெற வேண்டும்
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
(MUSIC)

உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் ஏன்வேண்டும் எழ வேண்டும்
(SM)
உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் எழ வேண்டும்
என்று இருக்கும் எந்தன் சின்ன மனதில் உ
ன்னைப் போற்றி பாடல் மட்டும் எழ வேண்டும் 
ன்னைப் போற்றி பாடல் என்றும் எழ வேண்டும் 
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி

 

சாயி கீதம்-7
முதல்பக்கம்

Monday, August 21, 2023

642.சாந்தியைத் தேடுவாய்(மௌனமே பார்வையால்) **

 
சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி
(1+SM+1)
(MUSIC)

எந்தனுக்குள்ளே உள்ள அந்த அமைதி தனை என்ன செய்து நான் பெறவேண்டும் பெறவேண்டும்
(SM)
  எந்தனுக்குள்ளே உள்ள அந்த அமைதி தனை என்ன செய்து நான் பெறவேண்டும் 
  என்பதையுமே நீ சொல்லித் தரவே எந்தன் அலையும் நெஞ்சம் தனில் புக
  வேண்டும்
  அலை பாயும் நெஞ்சம் தனில் புக வேண்டும்...வா...
  சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி

(MUSIC)
சொல்லித்தரவே நீ பக்கமிருந்தால் ஏன் அந்த சாந்தி எனக்கேன் வேண்டும் ஏன் வேண்டும்
(SM)
சொல்லித்தரவே நீ பக்கமிருந்தால் ஏன் அந்த சாந்தி எனக்கேன் வேண்டும்
சாந்தி தனக்கே நல்ல சாந்தியளிக்கும் என் சாயி நீயிருக்க எது வேண்டும்..
என் சாயி உடனிருக்க எது வேண்டும்..சொல்...
சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி


Friday, August 26, 2022

594.ஆயிரம் ஜோதியுள்(மௌனமே பார்வையால்) **


ஆயிரம் ஜோதியுள் நீ ஜோதி ஆனதென்ன
சாயி உன் ஜோதியே என்றும் ஆதியானதென்ன
(MUSIC)
ஆயிரம் ஜோதியுள் நீ ஜோதி ஆனதென்ன
சாயி உன் ஜோதியே என்றும் ஆதியானதென்ன
Music
உந்தன்-அருளில் உள்ள அன்பின் ஒளியில் எங்கள் 
நெஞ்சில் உள்ள இருள் போவதென்ன போவதென்ன 
vsm
உந்தன் அருளில் உள்ள அன்பின் ஒளியில் எங்கள் 
நெஞ்சில் உள்ள இருள் போவதென்ன
அந்த ஒளியின் முன்னர் சூரியனும் கண் கூசி உன்னைப் பணியும் நிலை என்ன என்ன
உன்னைப் பணிந்து ஆசி பெறும் நிலை என்ன  
பல்..ஆயிரம் ஜோதியுள் நீ ஜோதி ஆனதென்ன
சாயி உன் ஜோதியே என்றும் ஆதியானதென்ன
Music
இந்த விளக்கில் எங்கள் சித்தம் விளங்க பல விந்தை புரியும் உந்தன் அருள் என்ன அன்பின் அருள் என்ன
vsm
இந்த விளக்கில் எங்கள் சித்தம் விளங்க பல விந்தை புரியும் உந்தன் அருள் என்ன
நெஞ்ச-விளக்கில் அன்பு என்னும்-ஒளியை நீ ஏற்ற-அதனின்-மேல் பேறென்ன 
உந்தன் அன்பினுக்கும் மேல் பேறென்ன 
பல்..ஆயிரம் ஜோதியுள் நீ ஜோதி ஆனதென்ன
சாயி உன் ஜோதியே என்றும் ஆதியானதென்ன


சாயி கீதம்-6

முதல்பக்கம்

 

Monday, June 13, 2022

592. காணுமே என்றுனை(மௌனமே பார்வையால்) **

 

காணுமே என்றுனை நான் தேடி நின்றதென்ன

தங்கமே என்றுநீ எனை ஏந்தி நின்றதென்ன
vsm
காணுமே என்றுனை நான் தேடி நின்றதென்ன
தங்கமே என்றுநீ எனை ஏந்திக் கொண்டதென்ன
Music

எந்தனுடே நின்று எந்தன் துயரைக் கொன்று ஏமி லேது என்ற மொழி என்ன உன் மொழி என்ன
vsm
எந்தனுடே நின்று எந்தன் துயரைக் கொன்று ஒன்றுமில்லை என்ற மொழி என்ன
என்னை உருக்க உந்தன் அன்பு இருக்க வேறேதும் உருக்க இடம் ஏதென்ன
வேறேதும் இல்லை என்ற அருளென்ன
நீ...காணுமே என்றுனை நான் தேடி நின்றதென்ன
தங்கமே என்றுநீ எனை ஏந்தி நின்றதென்ன

Music
சித்தத்தினுள்ளே சாயி நித்தமிருந்தால் நோய் வந்து வாட்டுகிற பயமென்ன ஏன் என்ன
vsm
சித்தத்தினுள்ளே தாய் நித்தமிருந்தால் நோய் வந்து வாட்டுகிற பயமில்லை
என்று இருக்கும் சாயி அன்னை-மொழியே வழி கொடுக்குமதனில்  ஐயம் ஏன் என்ன 
மன வாட்டமாக்குகிற பயமென்ன
நீ...காணுமே என்றுனை நான் தேடி நின்றதென்ன
தங்கமே என்றுநீ எனை ஏந்தி நின்றதென்ன


Sunday, September 5, 2021

563. சாயி ராம்(மௌனமே பார்வையால்) **


சாயி-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் அந்த நாமமாகுமா சொல்
(1+SM+1)
(MUSIC)
வில்லெடுத்துத்-தேன்-சிந்தும் பேரெடுத்து-மால்-புவி வந்த தோற்றம் சாயி ராமாகும் ராமாகும்
(SM)
வில்லெடுத்துத்-தேன்-சிந்தும் பேரெடுத்து-மால்-புவி வந்த தோற்றம் சாயி ராமாகும்
அண்ணல் அவனைக் கண்ட கண்கள் களிப்பால் இந்த லோக எண்ணம் தன்னை மறந்தாடும்
நெஞ்சம் லோக எண்ணம் தன்னை மறந்தாடும்
ஓம்..
சாயி-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் அந்த நாமமாகுமா சொல்
(MUSIC)
தித்திருக்கும் சாயி-நாமமுரைத்தால் வேறென்ன யோகம் மண்ணில்
பிற வேண்டும் இனி வேண்டும்
(SM)
தித்திருக்கும் சாயி நாமமுரைத்தால் வேறென்ன யோகம் மண்ணில் பிற வேண்டும்
மண்ணில் நடந்தே சாயி நாதப்-பெருமான் தந்த தரிச..னத்தில் நெஞ்சம் பாகாகும்
தந்தை தரிசனத்தில் நெஞ்சம் பாகாகும்
ஓம்..
சாயி-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் அந்த நாமமாகுமா சொல்



சாயி கீதம்-6

முதல்பக்கம்