Showing posts with label வீடு வரை உறவு. Show all posts
Showing posts with label வீடு வரை உறவு. Show all posts

Friday, May 12, 2017

174. தேடி வந்து அன்பை ஊட்டிவிட்ட சாயி (வீடு வரை உறவு)



விருத்தம்
ஆடிய பாதம் எங்கே ..பேசிய தெய்வம் எங்கே
கிடைத்திடா செல்வம் எங்கே ..சிறந்தவோர் கொற்றம் எங்கே
கூடுகின்ற பக்தர்-முன்னால்
தோன்றிடும் சாயி எங்கே
(Short Music)
தேடிவந்து-அன்பை ஊட்டிவிடும் சாயி
பாடிஅழும் மனதைத் தேடிவருவாயோ       
(2) 
 (MUSIC)
சாயிதரும்-ஊட்டம் நெஞ்சிலதன்  நாட்டம் (2)
கூடும்பக்தர்-கூட்டம் நித்தமதைப் பெறவா
தேடிவந்து-அன்பை ஊட்டிவிடும் சாயி
பாடிஅழும் மனதைத் தேடிவருவாயோ .. தேடிவருவாயோ
(MUSIC)
ஓ..சாயீ.. ..சாயிராம்.. ஓ..சாயீ.. ..சாயிராம்
சாயிராம்.. ..சாயிராம்...சாயிராம்..சாயிராம்...சாயிராம்
சாயிராம்..சாயிராம்.. ..சாயிராம்
நெஞ்சிருக்கும் அன்பை கொஞ்சிதரும் அன்னை (2)
உன்னையன்றி வேறு பூமிதனில் யாரோ
தேடிவந்து-அன்பை ஊட்டிவிடும் சாயி
பாடிஅழும் மனதைத் தேடிவருவாயோ.. தேடிவருவாயோ   
(MUSIC).. பாபா.. பாபா
எங்களிசைப் பாட்டால் வந்துவிடு மண்பால்
எங்கள்மனமெல்லாம்  கொள்ளையிடு-அன்பால்
(2)
கொள்ளையிடு-அன்பால்
தேடிவந்து-அன்பை ஊட்டிவிடும் சாயி
பாடிஅழும் மனதைத் தேடிவருவாயோ.. தேடிவருவாயோ
(MUSIC).. பாபா.. பாபா
தொட்டுத்தரும் நீறில் நோய்விரட்டும் மாயி
பட்டுவிழும் வெறுப்பு உன்னருளின் சிறப்பு...உன்னருளின் சிறப்பு
(2)
தேடிவந்து-அன்பை ஊட்டிவிடும் சாயி
பாடிஅழும் மனதைத் தேடிவருவாயோ.. தேடிவருவாயோ