Showing posts with label வளர்ந்த கலை மறந்து விட்டாள். Show all posts

Saturday, May 20, 2023

627.உரைத்தவுடன் தித்திப்பளிக்கும்(வளர்ந்த கலை மறந்து விட்டாள்)**

உரைத்தவுடன் தித்திப்பளிக்கும் சாயிநாமமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம் 
(2)
தொடங்குவதும் அடங்குவதும் அதனில் ஆகுமாம் 
அதன் பெருமைதனை உரைக்க-யுகம் கோடியாகுமாம்

(MUSIC)

காதில்-சாயி நாம கீதம் அமுதைப் பொழியுமாம் (2)
முற்றிலுமாய் பாபம் வினைகள் கரைந்து அழியுமாம்
அதில் முற்றிலுமாய் பாபம் வினைகள் கரைந்து அழியுமாம்
காசு தந்தால் வினையின் விளைவு சென்று ஓடுமா 
அந்த காசு தந்தால் வினையின் விளைவு சென்று ஓடுமா
எந்த மாசும் சாயி நாமம் சொன்னால் எதிரில் நிற்குமா 
நிஜம் இதனை சொன்னது யார் என்னல் ஆகுமா
அந்த நிஜம் இதனைச் சொன்ன பின்னும் ருசுவும் வேணு
மா
உரைத்தவுடன் தித்திப்பளிக்கும் சாயிநாமமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம்
(MUSIC)

மனம் சதமாய் உலகினிலே அலைந்து மேயுமாம் (2)
அது வித விதமாய் பொருளில் ஆழ்ந்து தன்னை மறக்குமாம்
அது வித விதமாய் பொருளில் ஆழ்ந்து உண்மை மறக்குமாம் 
அதைப்  பதமாய் அமரவைக்கும் சாயி நாமமாம் (2)
இந்த உண்மை சாயி நாமம் உரைக்க உரைக்கத் தோன்றுமாம் 
உரைத்தவுடன் தித்திப்பளிக்கும் சாயிநாமமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம்
(MUSIC)

மோக்ஷம் அடைய த்யானம் ஒன்று மட்டும் வழியுமாம் (2)
நீ நம்பிடவே இருக்கும் இது வேத மொழியுமாம் 
யாரும் கண்டிடவே இருக்கும் இது வேத மொழியுமாம் 
த்யானம் கூட நாம ஜபம் ஒன்று போதுமாம் 
அந்த த்யானம் கூட நாம ஜபம் ஒன்று போதுமாம்
இக வாழ்வு கடந்து போக உதவும் சாயி நாமமாம் 
நிஜம் இதனை சொன்னது யார் என்னல் ஆகுமா
அந்த நிஜம் இதனைச் சொன்ன பின்னும் ருசுவும் வேணுமா
உரைத்தவுடன் தித்திப்பளிக்கும் சாயிநாமமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம்
தொடங்குவதும் அடங்குவதும் அதனில் ஆகுமாம் 
அதன் பெருமைதனை உரைக்க-யுகம் கோடியாகுமாம்
தொடங்குவதும் அடங்குவதும் அதனில் ஆகுமாம் 
அதன் பெருமைதனை உரைக்க-யுகம் கோடியாகுமாம்
உரைத்தவுடன் தித்திப்பளிக்கும் சாயிநாமமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம்
அதை நினைத்தவுடன் அளித்துவிடும் உயர்ந்த மோக்ஷமாம்..

Other SONGS Recorded

முதல் பக்கம் 

Monday, March 6, 2023

611.கொடுத்ததெல்லாம்(வளர்ந்த கலை மறந்து விட்டாள்) **

கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்

நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
நீ குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ

காதில்-உந்தன் பஜனை தேனை ஊற்றுமே அய்யா (2)
சத்தியமே அது-மனதை ஆற்றுமே மெய்யா
சாயி சத்தியமே வருடி-மனதை ஆற்றுமே மெய்யா
காசினுக்கா அன்பளித்தாய் சொல்லுவாய் அய்யா
தந்தக் காசினுக்கா அன்பளித்தாய் சொல்லுவாய் அய்யா
இந்த காசினிக்கே அன்புதந்தாய் செல்வமாய் அய்யா
நடந்ததையே எழுதுகிறேன் கண்டு நான் கண்ணால் 
நீ  எழுதும்-திறம் அருளுவதால் அன்பின்-மாமன்னா 
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
(MUSIC)
தினம்-விதமாய் கட்சி தந்தே அருளுவாய் அய்யா (2)
எம் தேவையினை ஆசையினைக் கேட்டு-தான் அய்யா (2)
கொடுத்ததெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா-அய்யா (2)
அதை யார்-முயன்றும் துளியும்-கூட முடியுமா-அய்யா
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
நீ பெரிய அன்புக் களஞ்சியத்தைப் போலசாயிராம்
(MUSIC)
மேதினியில் உன்னைப் போல தெய்வம் ஏதய்யா (2)
நீ அன்பினுக்கே அன்பளித்தாய் அன்பினால் அய்யா
அந்த அன்பினுக்கே அன்பளித்தாய் அன்பினால் அய்யா
காவிரியாய் பெருக்கெடுத்தாய் அன்பிலே அய்யா
நீ காவிரியாய் பெருக்கெடுத்தாய் அன்பிலே அய்யா
அதன் கொள்ளிடமாய் ஆனவனும் நீயன்றோ அய்யா
நடந்ததையே எழுதுகிறேன் கண்டு நான் கண்ணால் 
நீ  எழுதும்-திறம் அருளுவதால் அன்பின்-மாமன்னா 
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்
குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
நீ குடும்பத்துடன் அன்பைப் பெறத் தந்ததாலன்றோ
அதைப் பெற்ற நாங்கள் குடும்பமாக ஆகினோம் என்றோ
கொடுத்ததெல்லாம் ஒன்றிரண்டா கோடி-சாயிராம்
அது பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம்
நீ பெரியதொரு களஞ்சியத்தைப் போலசாயிராம் ..

Monday, June 8, 2015

9. கரைந்து கண்ணில் நீர் சொரிந்து(வளர்ந்த கலை ) ***

( வளர்ந்த கலை மறந்து விட்டாள் )

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(2 times)
நீயில்லாமல் எமக்குகதி வேறுயார் பாபா
எங்கள் மனம்மகிழ அன்புமொழி கூறவா பாபா

(2 times)
கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
காவல்செய்து காக்குமெங்கள் தெய்வம்நீ பாபா( 2 times)
கூவல் கேட்டு வந்தணைக்கும் தாயும்நீ பாபா
எங்கள் கூவல் கேட்டு வந்தணைக்கும் தாயும்நீ பாபா
வாடும்மனதில் தேறும்மொழி கூறினாய் பாபா
நீ வாடும்மனதில் தேறும்மொழி கூறினாய் பாபா
எங்கள் நெஞ்சினிலே நிறைந்துநீயும் நிற்கிறாய் பாபா
மனதினிலே ஒளிகொடுக்கும் அன்புநீ பாபா
உன்னை மறந்திடவே எங்களினால் முடியுமா பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
தினமும்உன்னை பஜனைசெய்து பாடினோம் பாபா(2)
எங்கள் சேவையிலே உன்பதத்தை நாடினோம் பாபா(2)
நினைத்து உன்னை மனதினிலே உருகினோம் பாபா(2)
உந்தன் அருள்கொடுக்கும் ஒளியினிலே பெருகினோம் பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா

(Music)
நின்று எங்கள் மனதில் ஒளிரும் ஜோதிநீ பாபா(2)
இந்த அண்டம் முழுதும் படைத்துநிற்கும் ஆதிநீ பாபா(2)
 நீ இல்லாமல் வாடும்நாங்கள் சேய்களே பாபா(2)
உந்தன் மடியினிலே சேர்த்தணைக்கும் தாயும்நீ பாபா

கரைந்துகண்ணில் நீர்சொரிந்து வேண்டினோம் பாபா
நீ விரைந்துமீண்டும் அவதரித்து மண்ணில்வா பாபா
(2)

 நீ இல்லாமல் வாடும்நாங்கள் சேய்களே பாபா