Showing posts with label இறைவன் வருவான். Show all posts
Showing posts with label இறைவன் வருவான். Show all posts

Friday, May 29, 2020

324. இறைவன் அவன்தான்(இறைவன் வருவான்) **

இறைவன் …. அவன்தான் + (SM) + ஆ..ஆ..
இறைவன் அவன்தான் அந்த சாய்ராம் அன்புருவேதான் (2)
ஹரிஓம் எனவே அந்தஞானியர் தொழும்-மால் சிவனே (2)
இறைவன் அவன்தான் அந்த சாய்ராம் அன்புருவேதான்
(MUSIC)
அந்தக் கண்ண..னாய்ப்பிறந்து  வெண்ணை உண்டவன்
முன்னர்-வந்த யுகம்-தனில் வில்லைக் கொண்டவன்
(2)
சின்னக்-கையில் குடையென மலையை வைத்தான்
முன்னர் அவன் கல்லினைப் பேச வைத்தான்
(2)
அன்பே உன் மனமாகு 
சேவை என்பதை நாடு 
சாய்ராம் எனவே கூறு
சாய்ராம் எனவே கூறு
Pause
இறைவன் அவன்தான் அந்த சாய்ராம் அன்புருவேதான்
(MUSIC)
அன்பைக் கொண்டு சேவையைச் செய்யச் சொன்னவன்
கண்கள் ரெண்டில் பாசத்தைத் தந்து சென்றவன்
(2)
சாயி பிரான் நாமத்தை  நாமும் சொன்னால்
மெல்ல மெல்ல பாழ்வினை போகும் தன்னால்  
(2)
சொல்வோம் சாயி நாமம் இசைப்போம் சாயி கீதம் 
அதுவே நான்மறை யாகும்
அதுவே நான்மறை யாகும்
 இறைவன் அவன்தான் அந்த சாய்ராம் அன்புருவேதான் 
ஹரிஓம் எனவே அந்தஞானியர் தொழும்-மால் சிவனே
இறைவன் அவன்தான் அந்த சாய்ராம் அன்புருவேதான்