வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ (2)
மண்வந்த நாங்கள் இனிதே-வாழ அன்போடு நேரில் வாராயோ
வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Music)
இதமான சொல்கொண்..டவனே
அன்பில் விடமுண்ட-கண்ட-சிவனே
தயங்காமல்அருளு-பவனே என்றும் விளங்காத-பொருளிறைவனே
விரைவாக வந்து காப்போனே துணையாக நின்று இருப்பானே
விரைவாக வந்து காப்போனே துணையாக நின்று இருப்பானே
வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Music)
அழுகின்ற-நெஞ்சம்-சிரிக்கும்
உன்அன்பாலே அருளும்கிடைக்கும்
தொழுகின்ற உயிர்கள் தனக்கும் நெஞ்சில் நீங்காமல் ஜோதிவிளங்கும்
சிலையாக நின்ற இறைபோலே இல்லாமல் நேரில் வருவோனே
சிலையாகநின்ற இறைபோலே இல்லாமல்நேரில் வருவோனே
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
வாராயோ-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Music)
கடல்போலப் பெருகும்-நீரும்
உந்தன் அருளாலே உதிரும்நீறும்
மனம்போல கிடைக்கும்திருவும்
உந்தன் அருளாலே பெருகும்சோறும்
குறையாமல்நின்று துயர்போக்கும் தவறாமல்-வந்து உயிர்காக்கும்
குறையாமல்நின்று துயர்போக்கும் தவறாமல்-வந்து உயிர்காக்கும்
வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
மண்வந்த நாங்கள் இனிதே-வாழ அன்போடு நேரில் வாராயோ
வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
வாராய் என்-சாயி வாராயோ சேய்-எம்மைக் காண-வாராயோ
(Music)
ஓம் ஸ்ரீ ஸ்ரீ சாயிராம் சாயிராம்