Showing posts with label மறைந்திருந்தே பார்க்கும். Show all posts
Showing posts with label மறைந்திருந்தே பார்க்கும். Show all posts

Friday, May 22, 2020

551. யுகந்தொரும் பார் தோன்றும் (மறைந்திருந்தே பார்க்கும்) **



( Aligned to KARAOKE )

யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
(pause)
 ஸ்வாமி யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
அந்த ஈசனும்-நீ அன்பின் நேசனும்-நீ 
நான்கு யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
அந்த ஈசனும்-நீ அன்பின் நேசனும்-நீ 
நான்கு யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ

தாயெனவும் 
(MUSIC)
ஜகத்தில்  தாயெனவும்
சுழன்றிருக்கும் ஜகத்தில் தாயெனவும்
அன்பை வழங்கி-வரும்  தந்தை உருவினிலும்
சுழன்றிருக்கும் ஜகத்தில் தாயெனவும்
அன்பை வழங்கி-வரும்  தந்தை உருவினிலும்
நான்கு..
யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
(MUSIC)
ஜதி
அன்பு-ஒன்றாலே மண்ணைக் காப்பதற்கே
வந்த உன்னையல்லால்-தெய்வம் வேறறியேன்
(2)
சாயி-உன் பெயர் கூறப் போதுமே (2)
நெஞ்சம் லேசினும்-லேசா கும் பூப்போலே (2)
சாயிராம் சாயிராம் சாயிராம் …  சாயிராம்
யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
ஜதி
 போதங்களை  எளிதாய்த் தேன்-போலே 
வந்து லோகத்திலே-சொல்ல யார்-வேறே
(2)
மோகம்-எனும் ரோகம் போக-வைத்து (2)
உயர்-ஞானத்தையே வந்து நண்பனைப் போல் (2)
கூற-யார் வேறு-யார் சாயிராம் போல-யார்
யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
ஜதி
ஆடாமல் அசங்காமல் கருக்காக்கும் தாய்போல தரிசனத்தில் நடையை போட
வேறேது பேறேது எனலாக அதைக்காண பக்தஜனம் தினமும்-கூட 
கனிவோடு அன்பாக தாய்போல புவிமீது விரைவினில் துணையாக ஓடிவர யார் 
கூறு-யார் வேறு-யார் சாயிராம் போல-யார்
இதபோதம் சொல்லுவார் யார்
யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ
அந்த ஈசனும்-நீ அன்பின் நேசனும்-நீ
நான்கு யுகந்தொரும்-பார் தோன்றும் மாலவன்-நீ …
ஜதி


Wednesday, March 23, 2016

58. விரைந்து வந்தே காக்கும் (மறைந்திருந்தே பார்க்கும்)***





(Aligned to KARAOKE)

ஜதி

விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா...
( தாளம்  )
ஸ்வாமி..!
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து-அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
நாடிவந்தோம்..!
(Music)
உன்னை நாடிவந்தோம்..
சிறந்திருக்கும் உன்னை நாடிவந்தோம்
எங்கள் மனம்கனிந்தே சேவை புரிந்துவந்தோம்
சிறந்திருக்கும் உன்னை நாடிவந்தோம்
எங்கள் மனம்கனிந்தே சேவை புரிந்துவந்தோம்
இன்று ...
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
ஜதி
(Music)
எங்கிருந்தாலும் வந்து சேர்ந்திடய்யா
பிள்ளை  சோகத்தையே வந்து பார்த்திடய்யா  
(2)
பாவி-என் பிழை செய்தேன்  கோபமா
பாவி-என் பிழை செய்தேன் கூறவா 
எந்தன் பாட்டுக்கு வா வா-என் சாயீசா (2) 

பார்த்தியின்.. நாயகா.. சாந்தியின்.. தாயகா
 விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
(Music)
 ஜதி
வேதத்திலே இருக்கும் தூயோனே
உந்தன்-பாதத்திலே கொஞ்சம் இடம்-தாயேன் 
(2)
போதத்திலே என்னை மூழ்க வைத்து (2)
மன ஈரத்தையே தந்து சீர்-படுத்து (2)
பார்த்தியின் நாயகா.. சாந்தியின் தாயகா
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
 ஜதி
தேறாத நெஞ்சோடு மண்மீது நான்வாட
கண்ணிரண்டில்  நீருமோட
கூரான வினையோடு அடியார்கள் தினம்-வாட
கெஞ்சியவர் நொந்து-பாட
கனிவோடு எமைக்காக்க உருவோடு புவிமீது விரைவினில் துணையாக ஓடிவருவாய்
பர்த்தியின் நாயகா.. சாந்தியின் தாயகா
எமைக்-காக்கும் சாயிராம் வா 
விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
எங்கள் பிழைபொறுத்தே வந்து-அவதரிப்பாய்
இங்கு விரைந்துவந்தே காப்பாய் சாயீஸ்வரா
(Music)- ஜதி