Showing posts with label மயக்கமென்ன இந்த மௌனமென்ன. Show all posts
Showing posts with label மயக்கமென்ன இந்த மௌனமென்ன. Show all posts

Saturday, April 29, 2017

93.கலக்கமில்லை(மயக்கமென்ன இந்த மௌனமென்ன)***



கலக்கமில்லை...இனிக் கவலை-இல்லை....
 சாயிவந்துவிட்டான்.... மண்ணில்....
(Slow tempo-Viruttham)
கலக்கமில்லை இனிக் கவலைஇல்லை சாயிவந்துவிட்டான் மண்ணில்
துன்பமில்லை  இனித்துயரமில்லை- தந்தை வந்தணைப்பான் தன்னில்
பொற்பதங்கள் சென்றுபணிவதிலே எங்கள்பாவம்போக்கு பாபா
எம்வாழ்வினுக்கே பெரும் ஒளிவிளக்காய்நீ இருந்திடுவாய் பாபா
(Music)
நேர்காணல் தனில்-எம்கெஞ்சல் தனைக் கேட்டிருந்தாயே நீபாபா
கூறாமல் எம்குறைகளையேஉன் புன்னகையாலே தீர்த்தாயே
கார்மேகம்என அன்பில்அருள்மழை பொழிந்துவந்தாயே எம்தாயே (2)
பொய்விளையும் எம்மனதைத்  தட்டிஎழுப்பும் நீமெய்யே 
கலக்கமில்லை..ஆஹா ..இனிக் கவலைஇல்லை.. .. ஆ.. சாயிவந்துவிட்டான் மண்ணில்
(Music)
பாடிடுவாய் சாயீசன்பேர் உந்தன்  பாவக்கணக்கை நீ தீர்க்க
ஓடிடுவாய் அந்த பர்த்தியை நோக்கி சாயி பாதம் பணிந்துவிட
வல்வினைபோக்கி  அன்பினில்சாயி  உன்நலம்பேணிக் காத்திடுவான் (2)
எண்ணங்களில்நீ அன்பினைவடித்து சேவைசெய்வாய் அவன்தாளில்
கலக்கமில்லை..ஆஹா ..இனிக் கவலைஇல்லை.. .. ஆ.. சாயிவந்துவிட்டான் மண்ணில்
(Music)
அன்னத்தை இட்டக் கைகளினால் வரும்நோய்தீர்த்தானே சாயீசன்
எண்ணத்திலிருக்கும் அன்பினைஎடுத்து அதிசயங்கள்தான் புரிந்தானே
சாயிஅல்லால்ஒரு அன்னையைஇனியார் தேடிசென்றாலும் கிடைக்காதே(2)
அருள்புரியும் அந்த ஆண்டவனே அவன்  மனம்கோணாமல் இருப்போமே
கலக்கமில்லை...ஆஹா
இனிக் கவலை-இல்லை.... ஆஆஆ..
சாயிவந்துவிட்டான்.... மண்ணில்..ஆஆஆ..
துன்பமில்லை.. ஆஹாஹா இனித்துயரமில்லை.. ஆஹாஹா தந்தை வந்தணைப்பான் தன்னில்.. ஆஹாஹாஹாஹா
தந்தை வந்தணைப்பான் தன்னில்.. ஆஹாஹாஹாஹா