Showing posts with label ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே. Show all posts

Sunday, May 31, 2020

486. வாரீரோ அய்யா வாருங்களே(ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே )

வாரீரோ அய்யா வாருங்களே  (2)

நம் சாயி-பெருமான் அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்

ஒரு தாயிங்குசேயாய்த் தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்

வாரீரோ அய்யா வாருங்களே  + (MUSIC)

வாரீரோ அய்யா வாருங்களேன்

நம் சாயி-பெருமான் அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்

ஒரு தாயிங்குசேயாய்த் தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்

(MUSIC)

யுகங்கள் தோறும் இவனே வந்தான் சிறப்பாய் இங்கே

உழலும் உலகில் தருமம் நிலைக்கப் பிறந்தான் இங்கே

(2)

  எந்த-யுகமும் கண்டி..டாத விதத்தில்-வந்தான் அன்பிலே 

இந்த-உலகம் முழுதும்-தொழலாய் சாயி-மூன்றாம் கலியிலே

வாரீரோ அய்யா வாருங்களேன்

நம் சாயி-பெருமான் அவதரித்தழகாய் சிரிப்பதைப் பாருங்களேன்

ஒரு தாயிங்குசேயாய்த் தவழ்ந்திடும்-அதிசயம் உடன்வந்து காணுங்களேன்

வாரீரோ அய்யா வாருங்களேன்

(MUSIC)

நீயும்-நானும் இறைவன்-வடிவம் என்றே-சொன்னான்

நானதை-அறிவேன் உனக்கதை-உணர்த்திட வந்தேன்-என்றான்

(2)

இந்த லோகம் உள்ள யாவும் தனது என்றே  காட்டினான் 

இந்த உலகம் முழுதும் அன்பு அன்பு என்றே ஊட்டினான்