Showing posts with label காதல் ராஜ்ஜியம் எனது. Show all posts
Showing posts with label காதல் ராஜ்ஜியம் எனது. Show all posts

Friday, July 26, 2024

649.சாயி நீ இறை முழுது(காதல் ராஜ்ஜியம் எனது) **

 

சாயி நீ இறை முழுது 
உன்னைப் பாடும் நான் ஒரு பழுது
ஆனாலும் நான் உன்னைத் தொழுது
செய்யும் பாடலும்  உனக்கழகு..
(2)
SM

கண்ணான பக்தர்கள் உனக்குப்  பண்ணாகச் செய்வது எதற்கு
என்னும் கேள்வியின் பதிலே நீ
உன்னைச் சொல்லாத நா எனக்கெதற்கு.
(2)
சாயி நீ இறை முழுது 
உன்னைப் பாடும் நான் ஒரு பழுது
ஆனாலும் நான் உன்னைத் தொழுது
செய்யும் பாடலும்  உனக்கழகு..
(Music)

திங்கள் முடி சூடும் சிவன் சக்தி உடனோடும் அவதாரம் நீ கொண்டது
செங்கல் என் நெஞ்சம் அதைப் பஞ்சாக்குமுன் அன்பு தாளாத இன்பம் அது
(2)
உன் ஆசைக் கண்களின் சிரிப்பு
என்னாவியில் தரும் சிலிர்ப்பு
வார்த்தையால் அதைச் சொல்லப்போமோ
நெஞ்சம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு
சாயி நீ இறை முழுது 
உன்னைப் பாடும் நான் ஒரு பழுது
ஆனாலும் நான் உன்னைத் தொழுது
செய்யும் பாடலும்  உனக்கழகு..
(Music)

என்றும் அன்பூறும் உன் கண் பார்த்திட யார்க்கும் தானாகப் பாடல் வரும்
சித்தம் தனில் பித்தம் என உன்னால் வரும் தாக்கம் பாட்டாக என்னில் வரும்
பித்தாக்கும் அன்புந்தன் சிரிப்பு
சொத்தாகுமே அது எனக்கு
அமுது சாயி உன் உருவாகும்
சொற்கள் சொல்லாததே அதன் சிறப்பு
சாயி நீ இறை முழுது 
உன்னைப் பாடும் நான் ஒரு பழுது
ஆனாலும் நான் உன்னைத் தொழுது
செய்யும் பாடலும்  உனக்கழகு...




Tuesday, September 28, 2021

565. சாயிராம்-எனும் ஜபமே(காதல் ராஜ்ஜியம் எனது) ***

 

சாயிராம்-எனும் ஜபமே 
செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே 
நிஜமாக எழுமந்த நிஜமே

(2)
எந்நாளும் சாதனை இதுதான் 
மெய்ஞ்ஞானப் பாதையும் இதுதான் 
என்னும்- மாபெரும் மறைகூறும்
இணையில்லாத ரஹசியம் அறிவாய்
(2)
சாயிராம்-எனும் ஜபமே 
செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே 
நிஜமாக எழுமந்த நிஜமே 
(MUSIC)

இங்கே ஒரு-காலும் உடனங்கே ஒரு-காலும் 
வைத்தாடும் கலையை விடு 
நெஞ்சே மட-நெஞ்சே-ஒரு நஞ்சே-என-ஆசை 
கொண்டாடும் நிலையை விடு
(2)
எந்நாளும் லோகத்தில் பி டிப்பு  
கொண்டாட உனக்கில்லை சலிப்பு
சாயி ராம் என உரைக்காயோ 
என்றும் நில்லாமல் ஏனிந்தத் தவிப்பு
சாயிராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே
(MUSIC)

நெஞ்சே நீ சாயி எனக் கொஞ்சப் பொழுதேனும்
நினைத்தாலே பாபம் விடும்
தோம்தோம் தக-தோம்தோம் என நீ ஆடுதலின்றி 
மெய்ஞான சாந்தம் வரும்
நெஞ்சே-நீ அலைவதை நிறுத்து 
சற்றேனும் பரமனை நினைத்து
அழகு சாயிராம் எனும் நாமம் 
கொஞ்சம் சொன்னாலே ஆனந்தப் பெருக்கு
சாயிராம்-எனும் ஜபமே செய்யச் செய்ய உடன்- எழும் இதமே
அது-போலச் செய்திட தினமே நிஜமாக எழுமந்த நிஜமே