Showing posts with label நாலு பேருக்கு நன்றி. Show all posts
Showing posts with label நாலு பேருக்கு நன்றி. Show all posts

Thursday, May 4, 2017

525. எங்கு நீ எங்கு சாயி (நாலு பேருக்கு நன்றி) **


விருத்தம்
லோகத்தில் இருப்பதெல்லாம் கூடவே இருப்பதில்லை
நான் ஆசையாய் இருந்த-பிள்ளை தாய்மையும் போச்சு-கொள்ளை
என் தந்தை-தாய் போல-நீயும் சாயிராம் இருந்த-ஒன்றால்
நிம்மதி-கொண்டிருந்தேன் ஐயஹோ நீயின்றில்லை
எங்கு-நீ சொல் நீ-இன்று சென்றாய்
____________________
எங்கு நீ-எங்கு சாயி இன்று எங்கு நீ-எங்கு சாயி (2)
தாயைப்போலே எனக்கிருந்தாயே ஓடிச்சென்று போனதின்று
எங்கு நீ எங்கு சாயி..இன்று எங்கு நீ-எங்கு சாயி
(MUSIC)
உறவு-என்று உலகத்துக்கே இருந்தா..யே-என் சாயி
அழுவதற்கும் சிரிப்பதற்கும் இருக்கும் எந்தாய் நீயே
சோற்றுமூட்டை என்றே-வாழ்ந்தேன் என்..னையும்-நீ ஆட்கொண்டாயே (2)
சொந்தம்-என்றே நீயே எந்தாய் இன்று எனோ நீ-எனைப் பிரிந்தாய்
எங்கு நீ எங்கு சாயி
எங்கு நீ எங்கு சாயி இன்று எங்கு நீ எங்கு சாயி
தாயைப்போலே எனக்கிருந்தாயே ஓடிச்சென்று போனதின்று
எங்கு நீ எங்கு சாயி..இன்று எங்கு நீ-எங்கு சாயி
 (MUSIC)
இன்பத்தையே அள்ளித்தந்தாய் புன்னகை ஒன்றினில்-சாயி
துன்பத்திலே ஓடி-வந்தால் என்-முடி கோதிடும்-தாயே

நோய்க்கு-நல்ல ஒளடதம் வேண்டும்
சேய்க்குத்-தாயின் இன்முகம் வேண்டும்
(2)
பார்க்கு இக்கணம்  நீ வரவேண்டும்
பார்க்க தரிசனம் நீ தரவேண்டும் 
(PAUSE)
இன்று எங்கு நீ எங்கு சாயி
எங்கு நீ எங்கு சாயி இன்று எங்கு நீ எங்கு சாயி
தாயைப்போலே எனக்கிருந்தாயே ஓடிச்சென்று போனதின்று
எங்கு நீ எங்கு சாயி..இன்று எங்கு நீ எங்கு சாயி




524. காத்து அருள்-கூறு-சாயி(நாலு பேருக்கு நன்றி)**



விருத்தம்
வேதத்தில் இருப்பதெல்லாம் சொல்லவோர் திறமை-இல்லை. 
நான் பூஜையைப்-புரிந்ததில்லை எனக்கதும் பெருத்த-தொல்லை
என்-தந்தையே உனது-நாமம் கூறி-நான் நாலு-கண்ணின் 
நீர்த்-துளி துடைத்தல்-கூட ஐயஹோ செய்யேன் ஐயா
 என்னைக்-காத்து அருள்-புரி சாயி..
____________________
(MUSIC)
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி (2)
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் 
காத்து அருள்-புரி சாயி என்னைக் காத்து அருள்புரி சாயி 
(MUSIC)
உபநிடதம் உயர்-வேதம் எனவே-ஆயிரம் இருக்கு 
அவையனைத்தும் கற்பதற்கோ வேண்டும்-பற்பல-பிறப்பு
ஆற்று-வெள்ளம் தன்னில்-ஆடும் தூசு-போலே நான்-இருக்கேனே (2)
இந்த-நிலையில் கற்கணும்-என்றால் தந்தை-நீ-தான் அருள்தர-வேண்டும்
காத்து அருள்புரி சாயி 
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி 
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் 
காத்து அருள்-புரி சாயி என்னைக்-காத்து அருள்புரி சாயி
(MUSIC)
இன்பத்தையே துரத்திடும்-நான் சகதியில் உழன்றிடும்-பன்றி
உண்பதையே நினைத்திடும்-நான் எங்கனம்-உய்வது ஒன்றி
போதும்-போதும் எனும்-போதெல்லாம் வேண்டும்-வேண்டும் என்றென்-மனமே (2)
பொன்னைக்-காட்டிப் பொருளைக்-காட்டி 
ஆசைமூட்டிக் கொல்லும்-தினமே 
(PAUSE)
என்னைக் காத்து அருள்புரி-சாயி 
காத்து அருள்-கூறு-சாயி என்னைப்-பார்த்து அருள்புரி-சாயி
வேத-மூலம் அநாதி-நீயே நீசன்-எனையும் பார்த்துப்-பரிவுடன் காத்து அருள்-புரி சாயி என்னைக் காத்து அருள்புரி சாயி






517. யாரு வேறிங்கு கூறு ( நாலு பேருக்கு நன்றி ) **


விருத்தம்
உலகத்தின் அவதரிப்பில் சாயி-போல் யாருமில்லை
ஓர் தாயைப்-போல் பரிந்தளிக்க சாயி-போல் வேறு இல்லை 
ஹே சாயிராம் என்று நீ-உன் நெஞ்சினால் நினைத்துக் கொள்ள 
உடன்-உனை அணைத்துக்-கொள்ள எவருண்டோ சொல்லும் ஐயா
நீ-கூறு வே..றிங்கு யாரு
___________________________________

யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு (2)
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
ப்ரேமை-என்னும் உடல்-பூண்டே இறைவன் உலகினில் இருந்து 
அனுதினமும் அருளியதே தரிசனமெனும்-அருள் விருந்து
ஆறு போலே கைவழிந்தோடும் நீறில்-உள்ளம் சாந்தம்-காணும் (2)
காந்தம்போலே கண்-வருமன்பால் மனதைக்கவரும் சாயியைப் போல
யாரு வேறிங்கு கூறு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
துன்பத்திலே நீ-அழுதால் வந்தேன் என்பது-சாயி
பக்கத்திலே தானிருக்கேன் கண்ணே என்பதும் சாயி

வாடும்-பயிரை நீராய்க் காத்தான் - 
வாடும் வயிறில் பாலை வார்த்தான்
(2)
தனக்கு-என்றே வந்திடும் போது
பருக்கை-தானே உண்ணக் கொண்டான் 
(PAUSE)
நீ கூறு வேறிங்கு யாரு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள 
யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு