Showing posts with label அன்னமிட்ட கைகளுக்கு. Show all posts
Showing posts with label அன்னமிட்ட கைகளுக்கு. Show all posts

Sunday, May 31, 2020

479. அன்புதந்த சாயி-எங்கே(அன்னமிட்ட கைகளுக்கு) **

அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை போனதெங்கே

மண்ணில்-எங்கும் காணலையே செய்வதென்ன அண்ணே

செய்வதென்ன சொல்லேன்

(1+SM+1)

தாய்-எனப் பரிவு-தர தந்தையென அறிவுதர (2)

வேறொரு புகலுமில்லை மண்ணில்-இல்லை அண்ணே (2) மண்ணில்-இல்லை அண்ணே

(MUSIC)

மெய்யெடுத்துப் பாரில்-வந்தான் மானிடனாக

அவன்-கைகொடுத்துத் துணை-வருவான்  நம்-இடர்-போக்க

(2)

மண்-நடந்தான் சேவை-செய்தான் நம்-துயர் போக்க 

அது போல்-இனிமேல் யார்வருவா..ரோ-நமக்காக

யார் வருவா..ரோ-அண்ணே தாய்-வடிவாக

அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை போனதெங்கே

மண்ணில்-எங்கும் காணலையே செய்வதென்ன அண்ணே

செய்வதென்ன சொல்லேன்

(MUSIC)

சேய்-குரலை அறிந்திடுதல் யாருக்குக் கூடும்

ஒரு தாய்-வடிவில் வந்த-சாயி உனக்கது கேட்கும்

அழு-குரலை நிறுத்திடவே நீ-இங்கு மீண்டும்

திருஅவதாரம் கொண்டு-மண்ணில் வந்திட-வேண்டும் 

 அவதாரம் கொண்டு-மண்ணில் வந்திட-வேண்டும் 

அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை போனதெங்கே

மண்ணில்-எங்கும் காணலையே செய்வதென்ன அண்ணே

செய்வதென்ன சொல்லேன்

Thursday, May 4, 2017

505. அன்னமிட்ட அன்னையல்ல(அன்னமிட்ட கைகளுக்கு)

அன்னமிட்ட அன்னையல்ல பெற்றெடுத்தப் பிள்ளையல்ல 
கட்டிக்கொண்ட மனைவி-கூட சதமில்லை-சாயி சதமில்லை-சாயி
(1+Short Music+1)
தாயென நீயிருந்தாய் தந்தையென வழி-கொடுத்தாய் (2)
நானதை உணரவில்லை என்னருமைசாயி
நானதை உணரவில்லை என்னருமைசாயி என்னருமை சாயி
(MUSIC)
கடைசிவரை துணை-வருவார் என-நினைத்தேனே 
என் குறையைக்கண்டு எனை-வெறுத்தார் அவர்-எளிதாக
(2)
நான் நினைத்தேன் அவர்களையே பெரும்-துணையாக 
இனி யார்-வருவார் சாயி-உன் போல்-தாயாக  
யார்-வருவார் சாயி-உன் போல்-தாயாக 
அன்னமிட்ட அன்னையல்ல பெற்றெடுத்தப் பிள்ளையல்ல 
கட்டிக்கொண்ட மனைவி-கூட சதமில்லை சாயி சதமில்லை சாயி
(MUSIC)
பொன்-பொருளை ஓர்-துணையாய் நான்-நினைத்தேனே 
அது இறுதி-வரை இல்லை-என நான்-மறந்தேனே 
மனைவி மக்கள் காத்திடுவார் என-நினைத்தேனே 
அவர் இறுதி-வரை இல்லை-என நான்-உணர்ந்தேனே
உன்-பதமே எனக்குதவி என உணர்ந்தேனே
அன்னமிட்ட அன்னையல்ல பெற்றெடுத்தப் பிள்ளையல்ல 
கட்டிக்கொண்ட மனைவி-கூட சதமில்லை சாயி சதமில்லை சாயி