அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை
போனதெங்கே
மண்ணில்-எங்கும் காணலையே
செய்வதென்ன அண்ணே
செய்வதென்ன சொல்லேன்
(1+SM+1)
தாய்-எனப் பரிவு-தர தந்தையென
அறிவுதர (2)
வேறொரு புகலுமில்லை மண்ணில்-இல்லை
அண்ணே (2) மண்ணில்-இல்லை அண்ணே
(MUSIC)
மெய்யெடுத்துப் பாரில்-வந்தான்
மானிடனாக
அவன்-கைகொடுத்துத் துணை-வருவான்
நம்-இடர்-போக்க
(2)
மண்-நடந்தான் சேவை-செய்தான்
நம்-துயர் போக்க
அது போல்-இனிமேல் யார்வருவா..ரோ-நமக்காக
யார் வருவா..ரோ-அண்ணே தாய்-வடிவாக
அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை போனதெங்கே
மண்ணில்-எங்கும் காணலையே செய்வதென்ன அண்ணே
செய்வதென்ன சொல்லேன்
(MUSIC)
சேய்-குரலை அறிந்திடுதல்
யாருக்குக் கூடும்
ஒரு தாய்-வடிவில் வந்த-சாயி
உனக்கது கேட்கும்
அழு-குரலை நிறுத்திடவே
நீ-இங்கு மீண்டும்
திருஅவதாரம் கொண்டு-மண்ணில்
வந்திட-வேண்டும்
அவதாரம் கொண்டு-மண்ணில் வந்திட-வேண்டும்
அன்புதந்த சாயி-எங்கே அன்புத்-தந்தை போனதெங்கே
மண்ணில்-எங்கும் காணலையே செய்வதென்ன அண்ணே
செய்வதென்ன சொல்லேன்
No comments:
Post a Comment