Sunday, May 31, 2020

478. விளக்கில் மிளிர்கின்ற(விளக்கே நீ தந்த) **



விளக்கில் மிளிர்கின்ற ஒளி-சாயி

குளத்தில் நிறைகின்ற நீர்-சாயி

நிலம்-ஆ..காயம் ஒலி சாயி

காற்றும்-சாயி நீ-சாயி 

விளக்கில் மிளிர்கின்ற ஒளி சாயி

குளத்தில் நிறைகின்ற நீர் சாயி

(MUSIC)

மானிட-காயம் தன்னில்-பிறந்த சாயிராம் இறையாகும்

மனிதனின்  மாயம் போக்கிடவந்த அவனே நம்தெய்வம்

(2)

பூமியில்-நம்முடன் இருந்தத..னாலவன் நம்-போல் ஆவானோ (2)

நம்மைத் தன்-போல் ஆக்கிட-வந்தான் அவனே அறிவாயோ

விளக்கில் மிளிர்கின்ற ஒளி சாயி

குளத்தில் நிறைகின்ற நீர் சாயி

(MUSIC)

மண்ணில்-அவன்-மொழி நாமும்-கேட்டு அதன்வழிப் படவேண்டும்

அன்பின்-சேவை செய்து-அவனை நாம்-வழி படவேண்டும்

(2)  

சாயிசங்கீதம் என்றே-நமது நாளும் செல்ல-வேண்டும் (2)

யார்-மன..தும்-நம் நடைத்தையி..னால்-புண் -

படா..திருக்க-வேண்டும்

(2)

  விளக்கில் மிளிர்கின்ற ஒளி-சாயி

குளத்தில் நிறைகின்ற நீர்-சாயி

நிலம்-ஆ..காயம் ஒலி-சாயி

காற்றும்-சாயி நீ-சாயி







No comments:

Post a Comment