Showing posts with label கண்ணிலே இருப்பதென்ன. Show all posts
Showing posts with label கண்ணிலே இருப்பதென்ன. Show all posts

Friday, May 29, 2020

341. உன்னிலே இருப்பதென்ன( கண்ணிலே இருப்பதென்ன ) **



உன்னிலே இருப்பதென்ன சாயி பெருமானே 
அன்பு-ஒன்றே அன்பு-ஒன்றே சாயி-பெருமானே
(2) 
மானிடத்தின் காயம்தனில் சாயி பெருமானே  (2)
பொய்யுலகில் வந்த-மெய்யே சாயி பெருமானே (2)
உன்னிலே இருப்பதென்ன சாயி பெருமானே 
அன்பு-ஒன்றே அன்பு-ஒன்றே சாயி பெருமானே 
(MUSIC)
அன்புருவே என்று-சொல்லி சாயி பெருமானே...ஆ..ஆ.. ஆ..ஆ
அன்புருவே என்று-சொல்லி சாயி பெருமானே
ப்ரேமைதனைத் தந்தவனே சாயி பெருமானே
இன்னுமது இனிக்குதைய்யா சாயி பெருமானே 
மீண்டுமதைத் தந்திட வா சாயி பெருமானே

 பாரதனில் ஏன் பிறந்தாய் சாயி பெருமானே 
பாதியிலே ஏன் பறந்தாய் சாயி பெருமானே 
(2)
யாருமில்லை எங்களுக்கே சாயி பெருமானே 
சீக்கிரமாய் வந்திடைய்யா சாயி பெருமானே
(MUSIC)
உன் பிரிவை எப்படித்தான் சாயி பெருமானே..ஆ..ஆ.. ஆ..ஆ
உன் பிரிவை எப்படித்தான் சாயி பெருமானே. 
பாழும் நெஞ்சால் தாங்கிடுவோம் சாயி பெருமானே
ஊழ்வினையில் சோதனையால் வாடுகின்ற பாரை 
நீ பிறந்து காத்திடைய்யா சாயி பெருமானே 
 உன்னிலே இருப்பதென்ன சாயி பெருமானே 
அன்பு-ஒன்றே அன்பு-ஒன்றே சாயி பெருமானே


340. சொல்லிலே இதம்கொடுத்தாய்(கண்ணிலே இருப்பதென்ன) **




சொல்லிலே இதம்கொடுத்தாய் சாயிபெருமானே 
மீண்டுமதை வந்தளிப்பாய் சாயிபெருமானே
(2)
தெள்ளமுதின் தீஞ்சுவையும் சாயி பெருமானே (2)
வந்துதிக்கும்உந்தன் சொல்லாய் சாயி பெருமானே (2)
சொல்லிலே இதம்கொடுத்தாய் சாயிபெருமானே 
மீண்டுமதை வந்தளிப்பாய் சாயிபெருமானே
 (MUSIC)
அன்ன நடை தரிசனத்தை சாயி பெருமானே.. ஆஆஆ ..(2)
யாருமில்லை தந்திடவே சாயி பெருமானே
சின்னநடை கண்டிட நான் சாயி பெருமானே
எத்தனை நாள் காக்கணுமோ சாயி பெருமானே
பாரதனை ஏன்-துறந்தாய் சாயி பெருமானே
நானிரங்கல் பாடுதற்கோ சாயி பெருமானே
(2)
  நீறினிலே நோய் களைந்தாய் சாயி பெருமானே
பக்கம்-வந்து சோ..ற..ளித்தாய் சாயி பெருமானே
(MUSIC)
கைவரிசை வீரமெல்லாம் சாயி பெருமானே….. ஆஆஆ (2) 
எங்களிடம் காட்டுவதேன் சாயி பெருமானே
பாரதனில் நீஉலவும் நாளுக்குத்தன்..னாலே பாழும்நெஞ்சம் ஏங்குதைய்யே சாயி பெருமானே
   சொல்லிலே இதம்கொடுத்தாய் சாயிபெருமானே 
மீண்டுமதை வந்தளிப்பாய் சாயிபெருமானே