Showing posts with label அந்தரங்கம் நானறிவேன். Show all posts
Showing posts with label அந்தரங்கம் நானறிவேன். Show all posts

Sunday, May 28, 2017

530. நல்லறங்கள் நான் புரிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)



நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன் (2)
சாத்திரத்தின் சாரமிதே மாதவனின் கீதை-இதே (2)
இந்த-வழி நான்-நடந்தே செல்லும்படி நீ-அருள்வாய் (2)
நல்லறங்கள் நான் புரிவேன் கண்டபடி நான்-உரையேன்..
(MUSIC)
தேடிச்-சென்றே அறம்-புரிவீர் என்று-அன்று தாங்கள்
சொன்ன வழியினிலே நடந்திடுவோம் இன்றும்-என்றும் நாங்கள்
(2)
பணம்-தனையே யாரிடமும் கேட்பதில்லை-நாங்கள் (2)
பண்போடு யாமிருக்கக் காரணமே தாங்கள்
என்-சாயிராம் அன்னையல்லவா
அன்பு-வெள்ளமாய் சொன்னதல்லவா
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்
(MUSIC)
மாளிகையில் குடியிருந்தும் நீயும்-அன்புச் சேவை
தனைச்-செய்வதில்லை என-இருந்தால் நீயும் அன்பில் ஏழை  
(2)
அறிவீரென் வாழ்க்கையினைச் செய்தி-என்றே யாரும்
புரிவீரே சேவையொன்றே உய்வதற்குப் போதும்

என-ஸ்வாமி கூறியதே ப்ரேமையெனும் போதம்
(2)
என் சாயிராம் அன்னையல்லவா
அன்பு-வெள்ளமாய் சொன்னதல்லவா
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்
நல்லறங்கள் நான்-புரிவேன் கண்டபடி நான்-உரையேன்



529. அந்த ரங்கன் நீயல்லவா (அந்தரங்கம் நானறிவேன்)



அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா (2)
சுந்தரத்தின் தாள்-எடுத்துப் பாரினில்-ந..டந்த-சிவா
சுந்தரத்தின் தாள்-எடுத்துப் பாரில்-ந..டந்த-சிவா

உந்தன்-மொழி தேனல்லவா மீண்டுமதைச் சொல்..லிடவா (2)
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
(MUSIC)
ஸ்வாமி-தந்த கரிசனத்தை அள்ளி-உண்ட கண்கள்
அந்த-தரிசனத்தில் இமைக்கவில்லை உண்மை-கண்டு தாங்கள்
(2)
மனதின்-கதை வேறு-இல்லை அதுவும் கிடந்து-ஏங்க (2)
அவன்-ஓடிச் சென்று-விட்டான் யோகத்துயில் தூங்க
ஹே சாயி..ராம்-நீ  தந்தையல்லவா
ஏங்கியழும்-நான் பிள்ளையல்லவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
(MUSIC)
தாமரையின் பதம்-எடுத்து எங்களது-ஸ்வாமி
நீ நடக்கும்-எழில் கண்டிடவே ஏங்கும் எந்தன் ஆவி
(2)
அறியேனே சாதனையில் த்யானம்-என்று கூடும் (2)
அலை-ஓயும் என்றிருக்கேன் ஸ்நானம்-என்று ஆகும்
ஹே சாயிராம்-நீ  தந்தையல்லவா
பிள்ளையல்லவா-நான் என்னை-அள்ளவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
ஆஆ ..