Showing posts with label துயிலாத பெண்ணொன்று. Show all posts
Showing posts with label துயிலாத பெண்ணொன்று. Show all posts

Saturday, May 9, 2020

169. யுகம்தோறும் மண்வந்த (துயிலாத பெண்ணொன்று) ***


யுகம்தோறும் மண்வந்த இறைவன் எங்கே .. இங்கே
எந்நாளும் யுகம்தோறும் மண்வந்த இறைவன்
எங்கே .. இங்கே
எந்நாளும் யுகம்தோறும் மண்வந்த இறைவன்
(MUSIC)
அலையாகத் துயர் வந்த போதும்
அதில் படகாகும் நம்சாயி பாதம்
(Short Music)
துணையாக உடன் நின்று காக்கும்
சாயி எனும்நாமம் வினைகோடி போக்கும் (2)
யுகம்தோறும் மண்வந்த இறைவன்
யாரோ.. சாய்ராம்
எந்நாளும் யுகம்தோறும் மண்வந்த இறைவன்
(MUSIC)
காலைபின்-மாலைக்கும் நாளும்
மனம் அவன்பாதக் காட்சிக்கு ஏங்கும்
(Short Music)
யுகம்தோறும் நாம்காணும் வண்ணம்
மண்ணில் வரும்சாயி ஒருதெய்வச் சின்னம் (2)
யுகம்தோறும் மண்வந்த இறைவன்
யாரோ.. சாய்ராம்
எந்நாளும் யுகம்தோறும் மண்வந்த இறைவன்
(MUSIC)
விரைந்தோடி வா சாயி மண்ணில்
வந்து ஒளி கூட்டு  உன் அன்பு நெஞ்சில்  
நெஞ்சம் தினம் வாட ஆறாகும் கண்ணில்
அது விழுந்தோடக் கடலாகும் மண்ணே (2)
யுகம்தோறும் மண்வந்த இறைவன் ..சாய்ராம்
எந்நாளும் யுகம்தோறும் மண்வந்த இறைவன்