Showing posts with label கல்யாண நாள் பார்க்க. Show all posts
Showing posts with label கல்யாண நாள் பார்க்க. Show all posts

Saturday, April 29, 2017

91. பொல்லாத வினை போக்கும்( கல்யாண நாள் பார்க்க )***




பொல்லாத வினைபோக்கும் சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில் வந்த-ராமா
செல்லாத இடர்போக்கிக் கொல்லு பாபா
வந்தெங்கள் சிந்தையிலே நில்லுபாபா
பொல்லாத வினை போக்கும் சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில் வந்த-ராமா
(Music)
கன்னம்தனில் சின்னப்பரு ரொம்பஎழில் பாபா
கன்னல்மொழி உந்தன்மொழி கம்பரசம் தானா
மண்நடந்த உந்தனடி பொன்னின்ஒளி பாபா
பட்டுக்கரும் மேகமுந்தன் அடர்சிகைதானா
பொல்லாத வினைபோக்கும் சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில் வந்த-ராமா
(Music)
எந்நாளும் உந்தனடி சிந்தையிலே பாபா
அந்நாளில் சொன்னபடி வந்துவிடு பாபா
நடந்ததை யேநினைத்து நாங்கள் ஏங்கலாமா
நாளைநீ வரும்நாளை  பார்த்திடுவோமா
பொல்லாத வினைபோக்கும் சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில் வந்த-ராமா
(Music)
சந்திரனும் சூரியனும் உன்விழிகள் பாபா
தந்துசென்றாய் நாங்கள்செல்ல அன்புவழி-பாபா
விண்விட்டு  மறுபடியும் புலம்வருவாயா
கண்காட்டித் திருவடியில் புகல்தருவாயா 

பொல்லாத வினை போக்கும் சாயி பாபா
கணம்நில்லாத புவிதன்னில் வந்த-ராமா
 செல்லாத இடர்போக்கிக் கொல்லு பாபா
வந்தெங்கள் சிந்தையிலே நில்லுபாபா
பொல்லாத வினை போக்கும் சாயி பாபா
(Both)