Showing posts with label எல்லோரும் நலம்வாழ. Show all posts
Showing posts with label எல்லோரும் நலம்வாழ. Show all posts

Sunday, May 10, 2020

218. அன்போடு நாம்காண(எல்லோரும் நலம்வாழ) **



அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
(Short Music)
(2)
பூப்போன்ற  அன்புள்ளம் பார்வந்தது
பொல்லாத மனம்சென்று சீர் செய்தது
(2)
விழி அன்பூறும்பேழை துளி திறந்தாலும் போதும்
நம்வஞ்ச வினையாவும் விரைந்தோடிடும்
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா ?
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா ?
 இனி நம்மோடு தான் வாழுமா ?
(MUSIC)
கண்ணீரில் நான் இங்கு தினம் வாடினேன்
அது தொடராத விதம்என்று தடை போடுவேன்
(2)
காயங்கள் ஆறாமல் நான் நோவதா
அதை பா..ர்வந்து இப்போதே நீ போக்கவா 
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
(MUSIC)
உன் சேவை புவிஇன்று  புரிகின்றது
உய் வண்ணம் அதுவென்று புரிகின்றது 
(2)
நான் எப்போதும்-உந்தன் மடி-தனைதேடும்-பிள்ளை
என்தாயே இப்போதே நான்-காண-வா

உன்பாதை வான்என்று நீ செல்லலாம்
இனி என்பாதை இதுவென்று யார் காட்டுவார் ?
(2)
எங்கேநீ சென்றாலும் வருவாயம்மா
நீ இப்போதே நான்பாடும் இசைகேட்கவா
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா






Saturday, May 6, 2017

107. அன்பூறும் நெஞ்சோடு ( எல்லோரும் நலம்வாழ )***


அன்பூ..றும் நெஞ்சோ..டு வந்தானடா  
நம்சாயி தாய்தானடா
நம் பாவம் குறை யாவும் பல தானடா   

அதை மறக்கின்ற சேய்தானடா 
(1+Short Music+1)
 (Music)
பூபோன்ற நல்நெஞ்சம் அவன் கொண்டது
அதிலன்பு  தேனாக வழிகின்றது
(2)
பழியில்லாத வாழ்வே  அவன்அருளாலே சேரும்
உன்நெஞ்சம் அவனோடு இணைத்தே-இரு
அன்பூ..றும் நெஞ்சோ..டு வந்தானடா  
நம்சாயி தாய்தானடா
நம் பாவம் குறை யாவும் பல தானடா   

அதை மறக்கின்ற சேய்தானடா 
 (Music)
திருநீறைத் தான்தந்து அருள்வானவன்
அதில்நம்நோயும் குணமாகச் செய்வானவன்
(2)
பாவங்கள் களைகின்ற சாயீஸ்வரன்
நாம்வாழ்கின்ற வாழ்வுக்கு அவனேசரண்
அன்பூ..றும் நெஞ்சோ..டு வந்தானடா  
நம்சாயி தாய்தானடா
நம் பாவம் குறை யாவும் பல தானடா   

அதை மறக்கின்ற சேய்தானடா 
 (Music)
நல்-சேவை அவன்சொல்லி நாம்கொண்டது
அதில்-பாவம் ஒழிந்தோடி செல்கின்றது
(2)
நாம் எப்போதும்-பிள்ளை அவன்வழிகாட்டும் தந்தை
சற்றேனும் அவன்நாமம் நாம்கூறுவோம்

நல்பாதை எதுவென்று அவன்-காட்டினான் 
அதைப் பின்பற்றி நாம்வாழ்வில் சீராகலாம்
(2)
அன்பென்ற ரூபத்தில் வந்தானடா
அவன் எப்போதும் நாம்வாழ அருள்வானடா
அன்பூ..றும் நெஞ்சோ..டு வந்தானடா  
நம்சாயி தாய்தானடா
நம்பா-வம் குறை-யாவும் பல-தானடா   

அதை மறக்கின்ற சேய்தானடா