அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
(Short Music)
(2)
பூப்போன்ற அன்புள்ளம் பார்வந்தது
பொல்லாத மனம்சென்று சீர் செய்தது
(2)
விழி அன்பூறும்பேழை துளி திறந்தாலும் போதும்
நம்வஞ்ச வினையாவும் விரைந்தோடிடும்
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா ?
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா ?
இனி நம்மோடு தான் வாழுமா ?
(MUSIC)
கண்ணீரில் நான் இங்கு தினம் வாடினேன்
அது தொடராத விதம்என்று தடை போடுவேன்
(2)
காயங்கள் ஆறாமல் நான் நோவதா
அதை பா..ர்வந்து இப்போதே நீ போக்கவா
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
(MUSIC)
உன் சேவை புவிஇன்று புரிகின்றது
உய் வண்ணம் அதுவென்று புரிகின்றது
(2)
நான் எப்போதும்-உந்தன் மடி-தனைதேடும்-பிள்ளை
என்தாயே இப்போதே நான்-காண-வா
உன்பாதை வான்என்று நீ செல்லலாம்
இனி என்பாதை இதுவென்று யார் காட்டுவார் ?
(2)
எங்கேநீ சென்றாலும் வருவாயம்மா
நீ இப்போதே நான்பாடும் இசைகேட்கவா
அன்போடு நாம்காண வந்தானம்மா
அவன்போல பார்-காணுமா
சாயீசன் திருமேனி பார்-தோன்றுமா இனி நம்மோடு தான் வாழுமா
No comments:
Post a Comment