எதிரினில் நடந்து பார்வையிலே உன் அருளினைத் தந்தாயே
பாரில் மானுடம் புனைந்து தானும் வாழ்ந்த இறை வடிவம் நீயே
(1+SM+1)
உன்கையில் உதிர்ந்த திருப்பொடியால்-வல்
வினைகளைக் களைந்தாயே
மண்தரை நடந்த திருவடியால்-வல் வினைகளைக் களைந்தாயே
சுவை யாவும் சேர்ந்து தோன்றும் பேரைத் தனதெனக் கொண்டாயே
சாயி எனும்-பெயர் கொண்டாயே

தானும் மானுடம் புனைந்து பாரில் வாழ்ந்த இறை வடிவம் நீயே
Music
சாந்தி நிலையம் கோவில் என நான் கொண்டதுவே உன் திருவருளோ...ஓ ..
சாந்தி நிலையம் கோவில் என நான் கொண்டதுவே உன் திருவருளோ
குளம்-என நிரம்பும் கண்களின் நீர்தான் பிறவியைக் கரைக்கும் மெய்ப் பொருளோ
சோதனை நிலவும் மானிடப் பிறப்பால் தேய்வதுவே என் வினைச் சுமையோ
தாயுன் விழியில் சிந்தும் அன்பில் எழுவதுவே செந்தமிழ் கவியோ
எழுவதுவே என்போல் கவியோ

விதியில் விளையும் சோதனை எனினும் உன் அருள்-முன்னே நின்றிடுமோ...
இனிய தமிழில் புனையும் கவியும் இறையவனே உன் திருவருளோ
அலைந்திடும் குரங்கு மனதையும் அடக்கும் மந்திரக் கோல் உன் புன் சிரிப்போ
பர்த்தியில் காணும் தரிசனம்-இதயம் நிறைவதுவே தான் உன் சிறப்போ
சுவை யாவும் ஒன்றாய்த் தோன்றும் பேரைத் தனதெனக் கொண்டாயே

-----------------------------------------------------
SAI Geetham 256 Tune:Madhuraiyil Parandha
You bestowed Your grace through Your gaze as You walked amidst us;
You are the Divine incarnate who assumed a human form to dwell upon this earth.
With the sacred dust falling from your hand, You dispelled grievous karmas;
With your holy feet that walked upon the earth, You dispelled grievous karmas;
You claimed as your own the name that embodies the essence of all flavors;
You bore the name 'Sai'.
Is it Your divine grace that led me to regard this abode of peace as a temple?
Are the tears welling up in my eyes—filling them like a sacred pool—the very essence that dissolves the cycle of birth?
Is the burden of my karma being worn away by the trials inherent in this human existence?
Is it the love flowing from a mother’s eyes that gives rise to this verse of pure Tamil?
Does it give rise to a poet like me?
Even when trials arise from destiny, does Your grace stand before them?
Is the poetry composed in sweet Tamil, O Lord, a manifestation of Your divine grace?
Is Your gentle smile the magic wand that tames the restless, monkey-like mind?
Is Your glory found in the vision beheld at Parthi—one that fills the heart completely?
You have claimed as Your own the Name that embodies the essence of all flavors.
---------------------------------------------------------